திருவண்ணாமலைக்கு இன்று பக்தர்கள் கிரிவலம் வர வேண்டாம்..!

திருவண்ணாமலையில் பவுர்ணமி கிரிவலம் செல்லும் பக்தர்கள் மழை எச்சரிக்கையால் இந்த முறை கிரிவலம் செல்வதை தவிர்க்குமாறு மாவட்ட ஆட்சியர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

கனமழை எச்சரிக்கையால் வெளி மாவட்ட பக்தர்கள் திருவண்ணாமலை வருவதை தவிர்க்கவும் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவில் உலக புகழ் பெற்றது. நாள்தோறும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கோயிலுக்கு சென்று வழிபடுவார்கள். மேலும் பவுர்ணமி கிரிவலம் என்றதுமே அனைவருக்கும் நினைவிற்கு வருவது திருவண்ணாமலை கோயில் தான். ஆன்மிக பூமியான திருவண்ணாமலையில் மலையை வலம் வந்து வழிபடும் வழக்கம் உள்ளது.

திருவண்ணாமலையில் அனைத்து நாட்களும் கிரிவலம் செல்லலாம் என்றாலும் லட்சக்கணக்கான பக்தர்கள் பவுர்ணமி நாளிலேயே கிரிவலம் செல்வதை வழக்கமாகக் கொண்டுள்ளனர். அந்த அளவிற்கு பிரசித்தி பெற்ற திருவண்ணாமலையில் தொடர்ந்து 12 ஆண்டுகள் கிரிவலம் வருபவர்களுக்கு வாழ்வில் துன்பம் என்பதே இருக்காது. அவர்களுக்கு முக்தி கிடைக்கும் என்பது ஐதீகமாகும்.

எனவே இந்த புரட்டாசி மாத பவுர்ணமி நாளில் கிரிவலம் வர உகந்த நேரத்தை அருணாசலேஸ்வரர் கோவில் நிர்வாகம் ஏற்கனவே அறிவித்துள்ளது. அதன் படி புரட்டாசி மாத பவுர்ணமி அக்டோபர் 16-ந்தேதி புதன்கிழமை இரவு 8 மணிக்கு தொடங்கி அடுத்த நாள் வியாழக்கிழமை 17-ந்தேதி மாலை 5.38 மணிக்கு நிறைவுபெறுகிறது. இது கிரிவலம் வர உகந்த நேரமாக கோவில் நிர்வாகத்தின் சார்பாக அறிவிக்கப்பட்டது. இ

தனையடுத்து புரட்டாசி பவுர்ணமி தினத்தை முன்னிட்டு, பக்தர்கள் திருவண்ணாமலை கிரிவலம் செல்வதற்கு வசதியாக, சேலம் புறநகர் பேருந்து நிலையம், ஆத்தூர், தருமபுரி, கிருஷ்ணகிரி, ஓசூர் மற்றும் பெங்களூரு பேருந்து நிலையங்களில் இருந்து 200 சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட திட்டமிடப்பட்டுள்ளது. மேலும் பக்தர்களும் கிரிவலம் செல்ல தயாராக இருந்தனர்.இந்த நிலையில் திடீரென வெளுத்து வாங்கிய கன மழையால் வட மாவட்டங்களான திருவண்ணாமலை. வேலூர், சென்னை, செங்கல்பட்டு , காஞ்சிபுரம், திருவள்ளூர் ஆகிய மாவட்டங்களில் தண்ணீர் தேங்கியது. மேலும் இன்றும் நாளையும் ஆரஞ்ச் அலர்ட் விடுக்கப்பட்டது. இதனால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையை தமிழக அரசு மேற்கொண்டது. 4 மாவட்டங்களுக்கு பொது விடுமுறை அறிவிக்கப்பட்டது. மற்ற மாவட்டங்களில் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் திருவண்ணாமலைக்கு ஆரஞ்சு அலர்ட் விடுத்து வானிலை மையம் எச்சரித்துள்ளது.இந்தநிலையில் இன்று இரவு முதல் நாளை மாலை வரை திருவண்ணாமலையில் கிரிவலம் செல்ல உகந்த நேரமாக அறிவிக்கப்பட்டுள்ளாதல் திருவண்ணாமலைக்கு இன்று மாலை முதல் லட்சக்கணக்கான பக்தர்கள் குவிவார்கள் என எதிர்பார்க்கப்பட்டது. இந்தநிலையில்திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் பாஸ்கர் பாண்டியன் வெளியிட்டுள்ள அறிவிப்பில், திருவண்ணாமலைக்கும் கனமழைக்கான ஆரஞ்சு அலர்ட் விடுக்கப்பட்டுள்ளதால், இந்த முறை பக்தர்கள் கிரிவலம் செல்வதை தவிர்க்க வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்துள்ளார். மேலும் பாதுகாப்பு கருதி, வெளி மாவட்ட பக்தர்கள் திருவண்ணாமலை வருவதை தவிர்க்க வேண்டும் எனவும் அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.