குழந்தையுடன் தாய் திடீர் மாயம்.

கோவை காளப்பட்டி ,சேரன் மாநகர் பகுதியில் உள்ள லட்சுமி நகரை சேர்ந்தவர் கோபிநாத். ஆட்டோ டிரைவர் அவரது மனைவி கல்பனா (வயது 25) இவர் கடந்த 2 -ந்தேதி வீட்டில் இருந்த 4 பவுன் நகைகளை எடுத்துக்கொண்டு தனது 3 வயது ஆண் குழந்தை பிரனீத்துடன் எங்கோ சென்று விட்டார். இது குறித்து அவரது கணவர் கோபிநாத் பீளமேடு போலீசில் புகார் செய்தார் .போலீசார் வழக்கு பதிவு செய்து தேடி வருகிறார்கள்.அந்தப் பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராக்களை ஆய்வு செய்தபோது கல்பனா ஒரு காரில் தன் குழந்தையுடன் செல்வது தெரியவந்தது.