கடலூர் மாவட்டம் சேத்தியாத்தோப்பை அடுத்த வளையமாதேவி பகுதியில் என்.எல்.சிக்கு நிலம் எடுப்பதற்காக பல நூறு ஏக்கர் பரப்பளவில் பயிரிடப்பட்டிருந்த குறுவைப் பயிர்களை இராட்சத எந்திரங்களைக் கொண்டு கடலூர் மாவட்ட நிர்வாகமும், என்.எல்.சி நிறுவனமும் அழித்திருக்கின்றன. அதற்கு பாட்டாளி மக்கள் கட்சி கடும் எதிர்ப்பு தெரிவித்து பல இடங்களில் போராட்டங்களை நடத்தியது. பாதிக்கப்பட்ட மக்களும் இதற்கு எதிராக போராடுகின்றனர். ஆனால், கடலூர் மாவட்ட நிர்வாகமும், என்.எல்.சியும் இதுகுறித்தெல்லாம் சிறிதும் கவலைப்படாமல், சேதமடைந்த பயிர்களுக்கு இழப்பீடு வழங்குவோம் என்று கூறி, இரண்டாவது நாளாக பயிர்களை அழித்து நிலங்களைக் கைப்பற்றும் பணிகளில் ஈடுபட்டுள்ளனர்.
வேளாண் விளை நிலங்கள் கையகப்படுத்தப்படுவதை பாட்டாளி மக்கள் கட்சி அனுமதிக்காது. என்.எல்.சி. இந்தியா நிறுவனம் தமிழ்நாட்டில் இருந்து வெளியேற்றப்பட வேண்டும் என்ற நிலைப்பாட்டில் இருந்து ஒரு போதும் பின்வாங்காது. ஆதரவற்ற நிலையில் உள்ள கடலூர் மாவட்ட மக்களின் பாதுகாவலனாக பாட்டாளி மக்கள் கட்சி தொடர்ந்து களமிறங்கிப் போராடும். அதன் ஒரு கட்டமாக, என்.எல்.சி.க்காக விளைநிலங்கள் கையகப்படுத்தப்படுவதை உடனடியாக தமிழ்நாடு அரசு கைவிட வேண்டும்; என்.எல்.சி. நிறுவனம் வெளியேற வேண்டும் ஆகிய கோரிக்கைகளை வலியுறுத்தி, நடைபெற்ற முற்றுகையிடும் போராட்டத்தில் பாட்டாளி மக்கள் கட்சி தலைவரும், மாநிலங்களவை உறுப்பினருமான மருத்துவர் அன்புமணி இராமதாஸ் கைது செய்யப்பட்டார். கைது செய்யப்பட்டதை கண்டித்து தருமபுரி மேற்கு மாவட்ட பாட்டாளி மக்கள் கட்சி சார்பில் தருமபுரி நகரம், நல்லம்பள்ளி, இண்டூர், பென்னாகரம், பாப்பாரப்பட்டி, ஏரியூர், சின்னம்பள்ளி, பி.அக்ரகாரம், காரிமங்கலம், பெரியாம்பட்டி, வெள்ளிச்சந்தை, பாலக்கோடு, மாரண்டஅள்ளி உள்ளிட்ட பல்வேறு இடங்களில் சாலை மறியல் போராட்டம் நடைபெற்றது. இப்போராட்டங்களில் ஈடுபட்டவர்களில் சுமார் 1000த்திற்கும் மேற்பட்டோர் கைது செய்து அந்தந்த பகுதிகளில் அமைந்துள்ள மண்டபங்களில் அடைக்கப்பட்டனர்.
இந்த சாலை மறியல் போராட்டங்களில், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்கள் மரு.இரா.செந்தில், கி.பாரிமோகன், மாநில துணைத் தலைவர் பாடிசெல்வம், மாவட்ட அமைப்பு செயலாளர் ப.சண்முகம், மாநில செயற்குழு உறுப்பினர்கள் பெ.பெரியசாமி, பி.இராமலிங்கம், மாவட்டத் தலைவர் மு.செல்வகுமார், வன்னியர் சங்க மாவட்ட செயலாளர் இ.மா.பாலகிருஷ்ணன், மாவட்ட அமைப்பு தலைவர் கே.இ.கிருஷ்ணன், மாநில பொதுக்குழு உறுப்பினர்கள் சுதாகிருஷ்ணன், பன்னீர்செல்வம், டி.ஜி.மணி, சி.வி.மாது, மாநில செயற்குழு உறுப்பினர் தேவேந்திரன், முன்னாள் மாவட்ட செயலாளர் ப.மதியழகன், மாவட்ட ஊராட்சிக்குழு உறுப்பினர் சரவணன், மாநில வழக்கறிஞர் சமூக நீதிப்பேரவை செயலாளர் மகாலிங்கம், மாவட்ட துணை செயலாளர் மு.மனோகரன், மாவட்ட இளைஞர் சங்க செயலாளர் ப.சி.சிவக்குமார், தமிழ்நாடு உழவர் பேரியக்க மாவட்ட செயலாளர்கள் ஆர்.கே.சின்னசாமி, முருகேசன்,மாவட்ட மாணவர் சங்க செயலாளர் சங்கர், மாவட்ட துணை தலைவர் மந்திரி, மாணவர் சங்க மாவட்டத் தலைவர் சத்ரியபிரபாகரன், மாவட்ட தேர்தல் பணிக்குழு தலைவர் வாசுநாயுடு, அன்புமணி தம்பிகள் படை மாவட்ட செயலாளர் இரா.கார்த்திகேயன், மாவட்ட பொருளாளர் சரவணகுமாரி, இளம்பெண்கள் சங்க மாவட்ட செயலாளர் சாந்தினி, தமிழ்நாடு உழவர் பேரியக்க மாவட்ட தலைவர் அய்யப்பன், நிர்வாகிகள் மாது, பெரியம்மாநாகு, சித்துராஜ், அரங்கராசு, சுப்ரமணி, சம்பத், பாலாஜி, ஈஸ்வரன், நந்திசிவம், சக்தி, பழனி உள்ளிட்ட மாநில, மாவட்ட, ஒன்றிய, நகர பேரூர், அணி, துணை, பொறுப்பாளர்களும், தொண்டர்களும், உள்ளாட்சி பிரதிநிதிகளும் பலர் கலந்து கொண்டனர்.