இந்து மத சடங்குகளை வேண்டாம்’ என தி.மு.க எம்.பி செந்தில்குமார் பகிரங்கமாக சொல்லியதன் மூலம் தி.மு.க தலைமை கடும் அதிர்ச்சி அடைந்துள்ளது என தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்துக்களுக்கு எதிரான கட்சி என்ற பிம்பத்தை உடைக்க தி.மு.க தலைமை எடுக்கும் கடும் முயற்சிகள் ஒரு புறம் இருக்க மறுபுறம் ‘இந்து சமய பூஜை வேண்டாம்’ என தி.மு.க எம்.பி செந்தில்குமார் ஒதுக்கியது தி.மு.க தலையை தலைமையை கடுமையாக அதிர வைத்துள்ளது.
மேலும் கடந்த தேர்தலில் இருந்து துவங்கி ஒன்றரை ஆண்டுகளாக இந்துக்களுக்கு எதிரி கிடையாது தி.மு.க என பிம்பத்தை ஏற்படுத்த அறிவாலயம் முயற்சித்து வேலை வரும் வேளையில் அதனை சுக்கு நூறாக உடைத்த எம்.பி செந்தில்குமார் மீது தலைமை கடும் கோபத்தில் உள்ளது.
தி.மு.க துவங்கப்பட்ட காலத்தில் இருந்து அதன் தலைவர்கள் இந்து மதத்தை கேலி கிண்டல் செய்வது, கொச்சைப்படுத்துவது போன்ற செயல்களில் ஈடுபட்டு வந்தனர் அதே நேரம் சிறுபான்மையினரின் ஓட்டுக்காக சிறுபான்மையினர் மதங்களுக்கு புகழாரம் சுட்டுவதை வழக்கமாக வைத்திருந்தனர். இது குறித்து இந்து மதத்தினர் விழிப்புணர்வு அடையாமல் இருந்தனர் இது தி.மு.க’வுக்கு சாதகமாக இருந்தது.
ஆனால் தற்பொழுது இந்து மதத்தில் ஏற்பட்ட விழிப்புணர்வால் தி.மு.க’வினர் முகமூடி மக்களுக்கு தெரிய துவங்கி உள்ளது, இதனால் கடந்த சட்டசபை தேர்தலின் சமயத்தில் தி.மு.க’வின் இந்து விரோதப் போக்கு மக்களிடையே மிகப்பெரிய அளவில் விழிப்புணர்வு ஏற்பட்டது, இதன் காரணமாக இந்து மக்களை சமாதானப்படுத்தும் வகையில் ‘தி.மு.க’வில் இருப்பவரில் 90 சதவீதம் இந்துக்கள் என ஸ்டாலின் அவர்களே பிரச்சாரம் செய்யும் வகையில் இருந்தது தி.மு.க’வின் இந்து மத வாக்கு வங்கி மீதான பயம்.
இனி இந்து மதத்தை பகைத்துக் கொண்டால் நாம் அரசியலில் இருக்க முடியாது என உணர்ந்து கொண்ட தி.மு.க அதற்குண்டான வேலைகளில் இறங்கியது குறிப்பாக இந்து சமய அறநிலைத்துறை அமைச்சராக சேகர்பாபு நியமிக்கப்பட்டார், தி.மு.க இந்து விரோத கட்சி அல்ல என மக்களிடம் உள்ள பிம்பத்தை மாற்ற கோவில் கோவிலாக காவி வேட்டி கட்டிக்கொண்டு ஏறுவதும், இறங்குவதும், கும்பாபிஷேகங்களில் கலந்து கொள்வதும் கோவில் நிலங்கள் அபகரிப்பை தடுப்பதுமாக தி.மு.க இந்துக்களுக்கு எதிரே இல்லை என்ற பிம்பத்தை ஏற்படுத்த மிகவும் சிரமப்பட்டார்.
ஆனால் வெண்ணை திரண்டு வரும் நிலையில் பானையை உடைத்த கதையாக தர்மபுரி எம்.பி செந்தில்குமார் நேற்று முந்தின ஒரு காரியத்தில் ஈடுபட்டார். அதாவது தர்மபுரி மாவட்டம் பாப்பிரெட்டிப்பட்டி ஒன்றியம் மாலாபுரத்தில் பொதுப்பணித்துறைக்கு சொந்தமான ஏரி உள்ளது இந்த ஏரியை மத்திய அரசின் திட்டத்தில் புராணமிக்க 1.38 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டது இதன் துவக்க விழா நேற்று முன்தினம் நடந்தது பணியை தொகுத்து வைக்க வருகை புரிந்த எம்.பி செந்தில்குமார் அங்கு பூமி பூஜை செய்து கொண்டிருந்த புரோகிதரை திட்டியது மட்டுமல்லாமல், இதெல்லாம் எனக்கு பிடிக்காது அரசு விழாவில் இந்து முறைகள் படி பூஜை நடப்பதாக கொதித்து எழுந்து மட்டுமல்லாமல் கிறிஸ்தவ பாதிரியார் எங்கே? முஸ்லிம் இமாம் எங்கே? என இருந்தவர்களை மிரட்டினார் அவரின் மிரட்டல் காரணமாக பூஜை பொருள்கள் அகற்றப்பட்டன.
தி.மு.க இந்துக்களுக்கு எதிரி இல்லை என்ற பிம்பத்தை கட்டியமைக்கும் வேளையில் இதுபோன்று இந்துமத சடங்குகளை புறக்கணித்த தி.மு.க எம்.பி என் மீது தலைமை கடும் கோபம் கொண்டதாக தெரிகிறது, இத்தனை நாள் தி.மு.க இந்துக்களுக்கு எதிர் இல்லை என ஓடி ஓடி உழைத்துக் கொண்டிருக்கும் வேலையில் தி.மு.க எம்.பி இவ்வாறு செய்தது தலைமையை கடும் கோபத்தில் ஆழ்த்தியுள்ளது.