கோவை ஆர் .எஸ் . புரம் ,காமராஜர் புரத்தில் உள்ள சி.எம்.சி. காலனியை சேர்ந்தவர் ரவி (வயது 56)ரியல் எஸ்டேட் தொழில் செய்து வருகிறார்.இவரது மனைவி பாரதி (வயது 49)இவர்கள் இருவரும் நேற்று ஸ்கூட்டரில் போத்தனூர் – செட்டிபாளையம் ரோட்டில் சென்று கொண்டிருந்தனர். செட்டிபாளையம் ரவுண்டானா அருகே திரும்பும் போது அந்த வழியாக வேகமாக வந்த டிப்பர் லாரி இவர்கள் சென்ற ஸ்கூட்டர் மீது மோதியது . இதில் இருவரும் படுகாயம் அடைந்தனர். பின்னால் இருந்த மனைவி பாரதி அதே இடத்தில்பரிதாபமாக இறந்தார் .ரவி படுகாயத்துடன் கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டுள்ளார். இது குறித்து செட்டிபாளையம் போலீசில் புகார் செய்யப்பட்டது. இன்ஸ்பெக்டர் லெனின் அப்பாதுரை சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தினார். இது தொடர்பாக சூலூர் போகம்பட்டி சேர்ந்த டிப்பர் லாரி டிரைவர் பழனிச்சாமி (வயது 61 )கைது செய்யப்பட்டார். மேலும் விசாரணை நடந்து வருகிறது,
டிப்பர் லாரி மோதி கணவருடன் ஸ்கூட்டரில் சென்ற மனைவி பரிதாப பலி..
