துண்டு துண்டாக வெட்டி கொலை: 3 குற்றவாளிகள் சிறையில் அடைப்பு
கோவையில் அழகு நிலைய ஊழியரை 12 துண்டுகளாக வெட்டி கொடூரமாக கொலை செய்த பெண் உட்பட மூன்று பேருக்கு 15 நாள் நீதிமன்ற காவல்..
ஈரோடு மாவட்டத்தை சேர்ந்தவர்பிரபு.கோவையில் உள்ள அழகு நிலையத்தில் பணியாற்றி வந்தார்.
இந்நிலையில், முன் விரோதம் காரணமாக அவரது பெண் நண்பர் கவிதா என்பவர் ஆண் நண்பர்களான அமுல் திவாகர், கார்த்திக் ஆகியோருடன் இணைந்து 12 துண்டுகளாக அவரை வெட்டி கொலை செய்தனர்.
துடியலூர் பகுதியில் வெரும் இடது கை மட்டுமே கண்டறியப்பட்ட இந்த வழக்கில், குற்றவாளிகள் 3 பேரையும் 6 நாட்களுக்குள் தனிப்படை போலீசார் கைது செய்தனர்.
இந்நிலையில், கைது செய்யப்பட்ட கவிதா, அமுல் திவாகர், கார்த்திக் ஆகிய மூன்று பேரையும் துடியலூர் போலீசார் ஜே.எம்.1ல்,நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர்.
கைது செய்யப்பட்ட 3 பேரையும் 15 நாட்கள் நீதிமன்ற காவலில் அடைக்க ஜெ.எம்.1 நீதிமன்ற நீதிபதி கோபாலகிருஷ்ணன் உத்தரவு பிறப்பித்தார்.