கடைகளில்வியாபாரிகளை மிரட்டி பணம் வசூல் – டிஸ்மிஸ் போலீஸ்காரர் கைது.!!

கோவை கணபதியைச் சேர்ந்தவர் பெருமாள் ( வயது 50) இவர் தமிழ்நாடு காவல்துறையில் 1997 – ஆம் ஆண்டு காவலராக பணியில் சேர்ந்தார்.சட்டவிரோதமான செயல்களில் ஈடுபட்டதால் 2010 -ம் ஆண்டில் நிரந்தர பணி நீக்கம் செய்யப்பட்டார்.இந்த நிலையில் இவர் தொண்டாமுத்தூர் பகுதிகளில் உள்ள மளிகை கடைகளில் பேரூர் போலீஸ் சப் இன்ஸ்பெக்டர் என்று கூறிக்கொண்டு குட்கா வேட்டை நடத்தி, வியாபாரிகளை மிரட்டி, பணம் வசூல் செய்வதாக தொண்டாமுத்தூர் போலீசுக்கு புகார் வந்தது. போலீசார் தீவிரமாக கண்காணித்து வந்தனர். இந்த நிலையில் அந்த பகுதியில் உள்ள ஒரு கடையில் வியாபாரியை மிரட்டி வசூல் வேட்டையில் ஈடுபட்ட போது பெருமாள் கையும் களவுமாக பிடிபட்டார். அவரை போலீசார் கைது செய்தனர். இவர் கோவை மாவட்ட பா.ஜ.க முன்னாள் ராணுவ பிரிவு துணைத் தலைவராக பதவி வகித்து வந்துள்ளார்.இவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்..