மதுபோதையில் தகராறு… பெயிண்டர் அடித்துக் கொலை – வடமாநில வாலிபர் கைது..!

நீலகிரி மாவட்டம் வண்டலூரை சேர்ந்தவர் பாலசுப்பிரமணியம் ( வயது 52 ) பெயிண்டர் இவர் திருப்பூர் அருள்புரம் பகுதியில் வசித்து வந்தார். இவர் கடந்த சில நாட்களுக்கு முன்பு அவினாசி சந்தைப்பேட்டை பகுதியில் தூங்கிக் கொண்டிருந்தார். அப்போது யாரோ மர்ம ஆசாமிகள் சிலர் பாலசுப்பிரமணியத்தை சரமாரியாக தாக்கியுள்ளனர். இதில் பலத்தகாயம் அடைந்த பாலசுப்ரமணியத்தை அங்கிருந்தவர்கள் மீட்டு கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. சிகிச்சை அளித்தும் பலனளிக்காமல் நேற்று பாலசுப்பிரமணியம் இறந்தார். இது குறித்து அவிநாசி போலீசார் கொலை வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினார்கள். விசாரணையில் பாலசுப்ரணியத்தை கொலை செய்தது ஒடிசா மாநிலத்தைச் சேர்ந்த சோனிலால் ராணா (வயது 28) என்பது தெரிய வந்தது . இவரை போலீசார் கைது செய்தனர். மது அருந்தும் போது ஏற்பட்ட மோதலில் இந்த கொலை நடந்துள்ளது.இவர் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்..