கோவை மாநகராட்சி மத்திய மண்டல உதவி கமிஷனராக பணிபுரிந்து வருபவர் எம். எம். கனகராஜ் ( வயது 52)இவர் நேற்று வட கோவை பவர் ஹவுஸ் ரோட்டில் ஆக்கிரமிப்புகளை அகற்றும் பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்தார். அப்போது அங்கு நின்று கொண்டிருந்த 2 பேர் இவரிடம் தகராறு செய்தனர். இதுகுறித்து உதவி என்ஜினியர் கனகராஜ் காட்டூர் போலீசில் புகார் செய்தார். போலீசார் அதே பகுதியை சேர்ந்த மஞ்சுளா, குரு ஆகியோர் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்..
கோவையில் ஆக்கிரமிப்புகளை அகற்றச் சென்ற மாநகராட்சி அதிகாரியிடம் தகராறு – போலீசில் புகார்..!
