கோயமுத்தூர் மாவட்டம் சூலூர் வட்டத்துக்கு உட்பட்ட கருமத்தம்பட்டி, சூலூர், அமைந்துள்ள அரசு அலுவலகங்களில் ஆய்வு மேற்கொண்டார் சோமனூர் பகுதியில் பொதுமக்களுக்கு பட்டா வழங்கக்கூடிய இடங்களை ஆய்வு மேற்கொண்டார். வட்டாட்சியர் அலுவலகத்தில் உள்ள பதிவு அறை இ-சேவை மையம், ஆதார், அரசு அலுவலர்கள் மேற்கொள்ளும் பணிகள் குறித்து ஆய்வு மேற்கொண்டார். மாவட்ட ஆட்சியரிடம் அரசு ஆண்கள் பள்ளியின் சார்பில் மழை காலங்களில் விளையாட்டு மைதானம் நீரில் மூழ்கி நீர் வடியும் காலம் வரை பயன்படுத்த முடியாமல் மாணவர்களுக்கு விளையாட்டு மைதானம் இருந்தும் பயன்படுத்த முடியவில்லை ஆகவே மைதானத்தை மேம்படுத்த கோரிக்கை மனுவும், பட்டணம் பகுதியில் குடிநீர் அதிக படுத்தி வழங்க வேண்டும் என்பது குறித்தும் கோரிக்கை மனுக்கள் வழங்கப்பட்டது. தொடர்ந்து சூலூர் பேரூராட்சிகளில் மேற்கொள்ளப்பட்டு வரும் திட்ட பணிகளை ஆய்வு மேற்கொண்டு பணிகளை விரைந்து முடித்து மக்கள் பயன்பாட்டுக்கு கொண்டு வர அறிவுறுத்தினார். ஆய்வின்போது சூலூர் வட்டாட்சியர் சரண்யா, பேரூராட்சிகள் உதவி இயக்குனர் மனோரஞ்சிதம், பேரூராட்சி செயல் அலுவலர் சரவணன், தலைவர் தேவி மன்னவன், துணை தலைவர் கணேஷ் உள்ளிட்ட அரசு அலுவலர்கள் உடன் இருந்தனர்.
சூலூர் வட்டத்துக்குட்பட்ட அரசு அலுவலகங்களில் மாவட்ட ஆட்சியர் ஆய்வு..
