மேட்டுப்பாளையத்தில் உள்ள அரசு உதவி பெறும் நடுநிலைப்பள்ளியில் ஆசிரியையாக பணியாற்றியவர் ஸ்டெல்லா மேரி. இவர் தனது பணியை நிரந்தரம் செய்ய ஒப்புதல் பெறுவது தொடர்பாக கோவை மாவட்ட தொடக்க கல்வி அலுவலகத்தை அணுகினார் .அந்த அலுவலகத்தில் உதவியாளராக பணியாற்றி வந்த கே. பாலச்சந்திரன் (வயது 57) என்பவர் ஆசிரியையின் கோரிக்கையை முடித்துக் கொடுப்பதாகவும் அதற்கு ரூ. 20 ஆயிரம் லஞ்சம் தர வேண்டும் என்று கேட்டுள்ளார். ஆனால் லஞ்சம் கொடுக்க விரும்பாத ஆசிரியை ஸ்டெல்லா மேரி கோவை லஞ்ச ஒழிப்பு போலீசில் புகார் செய்தார் .இதை தொடர்ந்து லஞ்ச ஒழிப்பு போலீசார் கடந்த 5 – 10 -2009 அன்று மாவட்ட தொடக்கக்கல்வி அலுவலகத்துக்கு வந்து கண்காணித்தனர். அப்போது உதவியாளர் பாலச்சந்திரனிடம் ஆசிரியை ஸ்டெல்லா மேரி ரூ 20 ஆயிரம் லஞ்சமாக கொடுத்தார். அப்போது பாலச்சந்திரனை போலீசார் கையும் களவுமாக பிடித்து கைது செய்தனர். இந்த வழக்கு விசாரணை கோவை லஞ்ச ஒழிப்பு விசாரணை நீதிமன்றத்தில் நடந்து வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி மோகன ரம்யா குற்றம் சாட்டப்பட்ட பாலச்சந்திரனுக்கு 2 ஆண்டு சிறைத் தண்டனையும், ரூ.20 ஆயிரம் அபராதமும் விதித்து தீர்ப்பு கூறினார்..
ரூ.20 ஆயிரம் லஞ்சம் வாங்கிய மாவட்ட கல்வி அலுவலக ஊழியர் – 2 ஆண்டு சிறை தண்டனை..!
