வரதட்சனை கேட்டு மனைவியை தாக்கி கொலை மிரட்டல்.கணவர்- மாமியார் மீது வழக்கு

கோவை மதுக்கரையைச் சேர்ந்தவர் இருதயராஜ் ,இவரது மகன் கிருபாகரன் ( வயது29)இவருக்கும் மலுமிச்சம்பட்டியைச் சேர்ந்த 25 வயது பெண்ணுக்கும் 16 -2- 2023அன்றுபெற்றோர்களால் நிச்சயிக்கப்பட்ட திருமணம் நடந்தது.இவர்கள் மதுக்கரையில் உள்ள கணவர் கிருபாகரன் வீட்டில் வசித்து வந்தனர்.இந்த நிலையில் மனைவியிடம் நகை பணம் கேட்டு கணவர் கிருபாகரன் அவரது மாமியார் விஜிலா மற்றும் உறவினர்கள்சேர்ந்து அந்தப் பெண்ணை தாக்கி கொலை மிரட்டல் விடுத்தார்களாம்.இது குறித்து பேரூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் கிருபாகரன் மனைவி புகார் செய்தார். இன்ஸ்பெக்டர் அமுதா வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினார். இது தொடர்பாக கணவர் கிருபாகரன்,மாமியார் விஜிலா உட்பட குடும்பத்தின் மீது கொலை மிரட்டல், தாக்குதல், வரதட்சனை கொடுமை உட்பட 4 பிரிவின் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.