சென்னையில் இருந்து விமானம் மூலம் கோவைக்கு வருகை தந்த முதலமைச்சருக்கு திமுகவினர் வரவேற்பு அளித்தனர்.தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஈரோட்டில் இரண்டு நாள் சுற்றுப்பயணமாக பல்வேறு அரசு மற்றும் நலத்திட்ட உதவிகளை வழங்குவதற்காக வந்துள்ளார்.இன்றும் நாளையும் ஈரோட்டில் நடைபெறும் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு அரசு சார்ந்த திட்டங்களை தொடங்கி வைத்து மற்றும் ஈரோட்டுப் பகுதிகளில் மேற்கொள்ளப்பட்டு வரும் அரசு திட்டங்கள் குறித்தான ஆய்வுப் பணிகளில் ஈடுபட இருப்பதாக அதிகாரிகள் தரப்பில் தகவல் கொடுக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் இன்று காலை 10 மணிக்கு சென்னை விமான நிலையத்திலிருந்து கோவை விமான நிலையத்திற்கு 11:30 மணியளவில் வந்திருந்தார்.முதல்வர் வருகையை முன்னிட்டு ஏராளமான திமுகவினர் விமான நிலையத்தில் திரண்டிருந்தனர். கோவையில் இருந்து சாலை மார்க்கமாக ஈரோடு செல்லும் முதலமைச்சருக்கு வரவேற்பு அளிக்க திமுகவான திட்டமிட்டு இருந்தனர்.அதன் ஒரு பகுதியாக கோவை விமான நிலையத்தில் திரண்ட திமுக நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் புத்தகங்கள் மட்டும் சால்வைகளை பரிசாக வழங்கினர்.
கோவை வந்த முதலமைச்சருக்கு திமுகவினர் உற்சாக வரவேற்பு..!
