8 வழி சாலை திட்டத்தை திமுக ஆதரிப்பது வரவேற்கத்தக்கது- எல்.முருகன் பேச்சு..!

ட்டு வழி சாலை திட்டத்தை திமுக ஆதரிப்பது வரவேற்கத்தக்கது என மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் தெரிவித்துள்ளார்.

பூலிதேவன் பிறந்த நாள் விழாவில் கலந்து கொள்ள மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் தூத்துக்குடி வருகை தந்தார். அப்போது தூத்துக்குடி விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்த மத்திய இணை அமைச்சர் எல்.முருகன், ஆசாதிகா அம்ரித் மஹோத்சவ் நிகழ்ச்சியின் ஒரு பகுதியாக, 75 அறியப்படாத தலைவர்கள் பற்றிய வரலாறு ஒவ்வொரு வாரம் ஒளிபரப்ப திட்டமிடபட்டுள்ளது.

விநாயகர் சதுர்த்தி கோலாகலமாக கொண்டாடபட்டு வருகிறது. தமிழக முதலமைச்சர் சில பண்டிகைகளை நேரில் சென்று வாழ்த்துகிறார். ஆனால் விநாயகர் சதுர்த்திக்கு வாழ்த்து தெரிவிப்பதில்லை. திமுக தலைவராக அவர் வாழ்த்து சொல்லாமல் இருக்கலாம் ஆனால் தமிழக முதலமைச்சராக அவர் வாழ்த்து சொல்லாதது பொதுமக்கள் மனதை புண்படுத்தியுள்ளதோடு, அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.

நாங்கள் வேல் யாத்திரை நடத்திய போது பயந்து வேலை தூக்கியவர் இப்போது மறுப்பதால், பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். எட்டு வழி சாலை திட்டத்தை கடந்த இரு ஆண்டுகளுக்கு முன்னர் கண்மூடித்தனமாக தீவிரமாக எதிர்த்தார்கள் என்பது ஆதாரத்துடன் இருகின்றது. நாட்டின் வளர்ச்சிக்கு அடிப்படை கட்டமைப்புகள் வளர வேண்டும். அந்த வகையில் இது போன்ற சாலை வசதிகள் தேவை. இன்று திமுக அதை ஆதரிப்பது வரவேற்கதக்கது.

நாட்டில் சட்டம் ஒழுங்கு சீர் கெட்டு உள்ளது. ஜெய்லர் போலீசாருக்கு பாதுகாப்பில்லை. போலீசார் வெட்டப்படுகிறார்கள். பெண்கள் முதியவர்களுகு பாதுகாப்பில்லை. கஞ்சா பற்றி விழிப்புணர்வு ஏற்படுத்தும் அளவிற்கு பரந்து விரிந்துள்ளது. உடனடியாக சட்டம் ஒழுங்கை சீரமைக்க வேண்டும் என்றார்.

திக் விஜய் சிங்கின் விமர்சனம் குறித்து பேசிய அவர், அனைவருக்கும் வீடு, குடிநீர், கொரானா காலத்தில் அனைவருக்கும் இலவச தடுப்பூசிகள் வழங்கியது உட்பட பல்வேறு திட்டங்கள் பிரதமர் மோடி கொண்டு வந்த சிறப்பான திட்டங்கள் ஆகும் என்று கூறினார்.