அப்படிப்போடு!! தீபாவளிக்கு 4 நாட்கள் விடுமுறை… தமிழக அரசின் ஸ்வீட் & சரவெடி அறிவிப்பு..!

சென்னை: இந்தாண்டு தீபாவளி பண்டிகை அக்டோபர் 31ம் தேதி வியாழக்கிழமை கொண்டாடப்படுகிறது. இந்நிலையில், நவம்பர் 1ஆம் தேதி வெள்ளிக்கிழமை விடுமுறை அறிவித்தால், தொடர்ச்சியாக 4 நாட்கள் விடுமுறை கிடைக்கும் என அரசு ஊழியர்கள் எதிர்பார்த்தனர்.

இதனால் அரசு ஊழியர்களின் கோரிக்கையை ஏற்று தீபாவளிக்கு அடுத்த நாளான நவம்பர் 1ஆம் தேதியை விடுமுறை நாளாக அறிவித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

தீப ஒளி திருநாள் என்று அழைக்கப்படும் தீபாவளி பண்டிகை வரும் அக்டோபர் 31ஆம் தேதி கொண்டாடப்பட இருக்கிறது. இனிப்புகள் தயாரித்து புத்தாடை அணிந்து பட்டாசு வெடித்து கொண்டாடாமல் தீபாவளி நிறைவடையாது.

சிறியவர்கள் தொடங்கி பெரியவர்கள் வரை பட்டாசு இல்லாமல் தீபாவளியை கொண்டாடவும் முடியாது. இந்த ஒரு நாள் விழாவுக்காக விருதுநகர் மாவட்டத்தில் சிவகாசியில் ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள் ஒரு வருடம் முழுவதும் உழைக்கின்றனர்.

கம்பி மத்தாப்பு தொடங்கி வானில் வர்ணஜாலம் காட்டும் வான வேடிக்கைகள் வரை பகல் இரவு நேரங்களில் பட்டாசு வெடித்து கொண்டாடுவது தான் தற்போது தீபாவளி ட்ரெண்டாக மாறிவிட்டது. பொதுவாக தீபாவளி பண்டிகையை முன்னிட்டு சென்னை தீவு திடலில் பட்டாசு விற்பனை நடைபெறும். இது மட்டுமல்லாமல் தமிழகம் முழுவதும் ஏராளமானோர் பட்டாசு கடைகளை அமைக்கின்றனர். இதுமட்டுமல்லாமல் புத்தாடை, வீட்டு உபயோக பொருட்கள் என வியாபாரம் களைகட்டும்.

இது ஒரு புறம் இருக்க தீபாவளி பண்டிகை தற்போது மாதக் கடைசியில் வருகிறது. இதனால் செலவுகளுக்கு என்ன செய்வது என்பது குறித்து குடும்ப தலைவர்கள் கலங்கி வருகின்றனர். அரசு ஊழியர்களுக்கு 30, 31ம் தேதிகளில் ஊதியம் அளிக்கப்படும். மேலும் தனியார் நிறுவன ஊழியர்களுக்கு ஒன்று முதல் ஐந்தாம் தேதி ஏன் பத்தாம் தேதி கூட ஊதியம் வழங்கப்படுவது வழக்கம். இந்த நிலையில் தீபாவளிக்கு முன்னதாகவே ஊதியம் வழங்க வேண்டும் என்ற கோரிக்கையும் எழுந்திருக்கிறது.

இது மட்டுமில்லாமல் அக்டோபர் 2024 விடுமுறை அதிகம் இருந்த மாதமாக இருந்தது. காந்தி ஜெயந்தி, காலாண்டு தேர்வு, ஆயுத பூஜை, சரஸ்வதி பூஜை என அடுத்தடுத்து விடுமுறை நாட்கள் இருந்தது. மேலும் கனமழை காரணமாக சில மாவட்டங்களில் பள்ளிகளுக்கும் விடுமுறை அறிவிக்கப்பட்டது. தற்போது தீபாவளி பண்டிகை விடுமுறை மட்டுமே இருக்கும் நிலையில் 31ஆம் தேதியான வியாழக்கிழமை கொண்டாடப்படுகிறது அதற்கு அடுத்து சனி ஞாயிறு வருகிறது இடையில் வெள்ளிக்கிழமை மட்டுமே வேலை நாளாக இருக்கிறது.

இதன் காரணமாக வெள்ளிக்கிழமை விடுமுறை அறிவித்தால் தொடர்ந்து நான்கு நாட்கள் விடுமுறை கிடைக்கும். இதனால் சென்னையில் இருந்து தென் மாவட்டங்களுக்கு செல்பவர்களுக்கு பயனுள்ளதாக இருக்கும் எனவும், அரசு ஊழியர்களுக்கும் பணிச்சுமை குறையும் அரசு விடுமுறை நாளாக அறிவித்து 31,1, 2, 3 அதாவது வியாழன், வெள்ளி, சனி, ஞாயிறு வரை விடுமுறை அளிக்க வேண்டும் என கோரிக்கை எழுந்தது. இது தொடர்பாக தமிழக அரசுக்கு அரசு ஊழியர் சங்கத்தினர் கோரிக்கை விடுத்தனர்.

இந்த நிலையில் அரசு ஊழியர்கள் கோரிக்கையை ஏற்று வெள்ளிக் கிழமையை அரசு விடுமுறை நாளாக அறிவித்து தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது. அதன்படி அக்டோபர் 1ஆம் தேதி, நவம்பர் 1ஆம் தேதி, 2ஆம் தேதி, 3ஆம் தேதி என நான்கு நாட்கள் விடுமுறை கிடைத்திருக்கிறது. அன்று அனைத்து அரசு அலுவலககங்கள், பள்ளிகள், கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. தீபாவளி பண்டிகையை கொண்டாட சொந்த ஊர் செல்வோருக்காக விடுமுறை அளிக்கப்பட்டுள்ள அதே நேரத்தில், அந்த நாளை ஈடு செய்யும் விதமாக நவம்பர் 9ஆம் தேதி வேலை நாளாக செயல்படும் என தமிழக அரசு கூறியுள்ளது.