இப்படி ஒரு மெசேஜ் வருதா… உஷாரா இருங்க… எச்சரிக்கும் சைலேந்திர பாபு .!!

சென்னை: உங்க ஐபி அட்ரஸில் இணையதளத்தில் ஆபாச படம் பார்க்கப்பட்டிருக்கிறது. குறிப்பாக குழந்தைகள் சம்பந்தப்பட்ட ஆபாச படம் பார்த்து இருக்கிறீர்கள்..

இதை சிபிஐ கண்டுபிடிச்சிருக்கு.. உங்க மேல டெல்லி போலீஸ் வழக்குப்பதிவு செய்து இருக்காங்க.. 24 மணி நேரத்தில் இதற்கு விளக்கம் அளிக்கனும்னு சொல்லி மெயில் வரும். நீங்க இதற்கு ரீப்ளே மட்டும் பண்ணாதீங்க என்று முன்னாள் டிஜிபி சைலேந்திரபாபு விழிப்புணர்வு வீடியோ வெளியிட்டுள்ளார்.

மக்கள் மத்தியில் இணைய பயன்பாடு அதிகரித்துவிட்ட நிலையில், இணையம் வழியாக நடைபெறும் மோசடிகளும் அதிகரித்துள்ளன. ஆன்லைனில் ரேட்டிங் கொடுத்து அதிக பணம் சம்பாதிக்கலாம் என வாட்ஸ் அப் மெசேஜ் அனுப்பி முதலில் சிறிய அளவிலான தொகை கொடுத்து பிறகு மொத்தமாக பணத்தை கறந்து ஏமாற்றும் சம்பவங்களும் அதிகரிக்கின்றன.

அதேபோல, உங்களுக்கு பரிசு அடித்துள்ளது.. அதை பெற வேண்டும் என்றால் உங்கள் அக்கவுண்ட் டீடெயில்ஸ் கொடுங்க என ஆரம்பித்து நைசாக பேசி, அப்பாவி பொதுமக்களை ஆசை வார்த்தைகளை கூறி பணத்தை மொத்தமாக அடித்து சென்று விடுகிறார்கள். வங்கி கணக்கில் உள்ள பணத்தை உங்களுக்கே தெரியாமல் பல நூதன வழிகளில் திருடும் சம்பங்களும் சமீப காலமாக அதிகரித்து வருகிறது.

இதனால், இத்தகைய இணையவழி மோசடிகளில் சிக்கி கொள்ளாமல் இருக்க மக்கள் மிகவும் உஷாராக இருக்க வேண்டும் என்றும் யாரிடமும் வங்கி கணக்கு போன்ற விவரங்களை பகிரக் கூடாது.. அதிக பணம் சம்பாதிக்கலாம் என்ற ஆசை வார்த்தைகளை நம்ப கூடாது என போலீசாரும் எச்சரித்து வருகிறார்கள். முன்னாள் டிஜிபி சைலேந்திர பாபு ஓய்வு பெற்ற பிறகு, பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக பல்வேறு கருத்துக்களை தனது சமூக வலைத்தளத்தில் பதிவிட்டு வருகிறார்.

அந்த வகையில், தற்போது, ஆபாச படம் பார்த்ததாக மிரட்டி பணம் பறிக்கும் மோசடியும் நடைபெற்று வருவதாக எச்சரித்து இருக்கிறார் சைலேந்திர பாபு.. இதுகுறித்து சைலேந்திரபாபு வெளியிட்ட வீடியோவில் கூறியிருபதாவது:- சைபர் குற்றவாளிகள் இப்போது மெயில் அனுப்புகிறார்கள்… தமிழக மக்களே ரொம்ப கவனமாக இருங்க.. உங்களுக்கு ஒரு மெயில் வரும்…

அதில், உங்கள் கம்ப்யூட்டரை பயன்படுத்தி உங்க ஐபி அட்ரஸ் பயன்படுத்தி இணையதளத்தில் ஆபாச படம் பார்க்கப்பட்டிருக்கிறது. அதிலும் குறிப்பாக குழந்தைகள் படம் சம்பந்தப்பட்ட ஆபாச படம் பார்த்து இருக்கிறீர்கள்.. இதை சிபிஐ கண்டுபிடிச்சிருக்கு.. உங்க மேல டெல்லி போலீஸ் வழக்குப்பதிவு செய்து இருக்காங்க.. ஆர்.ஏ டபிள்யூ கூட உங்களை வாட்ச் பண்ணுது. எனவே அடுத்த 24 மணி நேரத்தில் விளக்கத்தை நீங்கள் கொடுக்க வேண்டும்.

இல்லையென்றால் உங்கள் மேல் உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும் என்று உங்கள் பெர்சனல் மெயில் ஐடி அல்லது அலுவலக மெயில் ஐடிக்கு அனுப்புவார்கள்.. நீங்களோ உடனே பதறி அடித்து ஒரு பதில் கொடுத்தீர்கள்.. அல்லது விளக்கம் கொடுத்து விட்டீர்கள் என்றால் தொடர்ந்து உங்களை பயமுறுத்தி .. உங்களை மிரட்டி ஆரம்பத்தில் ஒரு 5 லட்சம் கொடுங்கள்.. அப்டினு ஏமாற்றுவாங்க..

அதற்கு பிறகு உங்களை தொடர்ந்து மிரட்டி உங்களிடம் இருந்து பணம் பறிக்க இந்த கும்பல் முயற்சி பண்ணும். எனவே இந்த மாதிரி யாராவது நீங்க ஆபாச படம் பார்த்து இருக்கீங்க.. உங்க மேல கேஸ் இருக்கு.. சிபிஐ வாட்ச் பண்ணுது என அப்டின்னு டெல்லி போலீஸ் கமிஷனர் அனுப்புவது போலவே இந்த கடிதத்தை அனுப்புகிறார்கள்.. நீங்க எதுவும் செய்ய வேண்டாம். போனை கட் செய்து வைத்துவிடுங்கள். அவ்வளவு தான். கவனமாக இருக்கவும். இவ்வாறு அந்த வீடியோவில் கூறியுள்ளார்.