திருச்சியில் நடக்கும் மாவட்ட ஆய்வுக் கூட்டங்களில் மருத்துவர்களுக்கு உரிய மரியாதை வேண்டும்.
திருச்சியில் இந்திய மருத்துவ மன்றம் மற்றும் மகப்பேறு மருத்துவ சங்கம் சார்பில் இந்திய மருத்துவ மன்றத்தில் செய்தியாளர்கள் சந்திப்பு நடைபெற்றது. இந்த சந்திப்பில் தாய்சேய் இருவரையும் காப்பாற்றும் மிகப் பொறுப்பில் மருத்துவர்கள் இருக்கிறார்கள் என்றும் மகப்பேறு கால இறப்பை குறைப்பதில் நம் மாநிலம் முன்னணியில் உள்ளது. அரசு தனியார் இரண்டு துறைகளில் மகப்பேறு மருத்துவர்கள் துறை செவிலியர்கள் மற்ற ஊழியர்களின் அனைவரும் உழைப்பால் இந்த நிலையை நாம் அடைந்திருக்கிறோம்.மாவட்ட ஆட்சியரின் ஆய்வுக் கூட்டத்தில் மருத்துவர்களுக்கு உரிய மரியாதை வேண்டும் ஆய்வுக்கு கூட்டம் நடத்தும் நாளும் நேரமும் குறிப்பிட்டு சொல்லப்படும் பொழுது மகப்பேறு மருத்துவத்துறை மருத்துவர்களுக்கும் மக்களுக்கும் பயனுள்ளதாக இருக்கும்.ஆய்வு கூட்டத்தில் மருத்துவமனை உரிமம் ரத்து மருத்துவர்களின் பட்டத்தை கேலி செய்தல் ஆகியவற்றை தவிர்க்க வேண்டும். மருத்துவர் ஆலோசனை கட்டணம் குறித்து பரிகாசிப்பு மருத்துவர்களை கொலையாளிகளை போல் பேசுதல் நோயாளியின் சார்ஜ் சீட்டை கோபத்தில் கிழித்து எறிந்தல் போன்ற நடவடிக்கைகளை இந்த டாக்டர்கள் சங்கம் கடுமையாக கண்டிக்கிறது என கூறினர். இந்த செய்தியாளர் சந்திப்பு கூட்டத்தில் டாக்டர்கள் அஷ்ரப், ஞானசேகரன், சுரேந்திரபாபு, முகேஷ் மோகன், தமிழ்ச்செல்வி, ரமணிதேவி, ஷர்மிளா, உமா வேல்முருகன், லாவண்யா உட்பட ஏராளமான மருத்துவர்கள் கலந்து கொண்டனர்.
மருத்துவர்கள் மரியாதையாக நடத்தப்பட வேண்டும் – திருச்சியில் இந்திய மருத்துவ மகப்பேறு மன்றத்தினர் பேட்டி..!
