கோவை பீளமேடு கிரி அம்மன் கோவில் வீதியைச் சேர்ந்தவர் அருண்குமார். இவர் தனது நண்பருடன் பீளமேடு, ஸ்ரீ ராம்நகர் எப்.சி ஐ. ரோட்டில் இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தார். அப்போது ஸ்ரீராம் நகரில் மனோஜ் என்பவரது வீட்டில் வளர்த்த நாய் அருண்குமாரை துரத்தி கடித்தது .இதில் அவருக்கு காயம் ஏற்பட்டது .இது குறித்து அவரது மனைவி துர்கா பீளமேடு போலீசில் புகார் செய்துள்ளார். போலீசார் மனோஜ் ( வயது 35) அவரது மனைவி சபிதா ( வயது 33) ஆகியோர் மீது வழக்கு பதிவு செய்துள்ளனர்.மேலும் விசாரணை நடந்து வருகிறது