அமெரிக்க அதிபர் தேர்தலில் குடியரசு கட்சி சார்பில் போட்டியிட்ட முன்னாள் அதிபர் டொனால்டு டிரம்ப் வெற்றி பெற்றுள்ளார்.
உலக நாடுகள் அனைத்தும் உற்றுநோக்கும் அமெரிக்க அதிபர் தேர்தல் நேற்று நிறைவடைந்த நிலையில், இன்று வாக்கு எண்ணிக்கை நடைபெற்றது. அமெரிக்காவில் 47-வது அதிபரை தேர்வு செய்வதற்கான தேர்தலில் ஜனநாயக கட்சி சார்பில் துணை அதிபர் கமலா ஹாரிசும், குடியரசு கட்சி சார்பில் முன்னாள் அதிபர் டொனால்டு டிரம்ப்பும் போட்டியிட்டனர். வாக்குப் பதிவு நிறைவடைந்ததை தொடர்ந்து இன்று வாக்கு எண்ணிக்கை நடைபெற்றது. குடியரசு கட்சி சார்பில் போட்டியிட்ட முன்னாள் அதிபர் டொனால்டு டிரம்ப் தொடர்ந்து முன்னிலையில் இருந்தார்.
இந்த நிலையில், அமெரிக்க அதிபர் தேர்தலில் குடியரசு கட்சி சார்பில் போட்டியிட்ட முன்னாள் அதிபர் டொனால்டு டிரம்ப் வெற்றி பெற்றுள்ளார். குடியரசுக் கட்சி சார்பில் போட்டியிட்டு 2-வது முறையாக அதிபராக பதவியேற்க உள்ளார் டிரம்ப். பெரும்பான்மைக்கு 270 Electoral College வாக்குகள் தேவைப்படும்
நிலையில், 277 வாக்குகளை உறுதி செய்து டிரம்ப் தொடர்ந்து முன்னிலையில் உள்ளார். இதன் மூலம் அவர் மீண்டும் அமெரிக்க அதிபராவது உறுதியாகியுள்ளது.