அருள்மிகு சுடலை மாடசாமி திருக்கோவில் கொடை விழா.!!

திருப்பூர் மாவட்டம் : உடுமலை, குறிச்சிக்கோட்டை பக்கம் உள்ள ஆலாம்பாளையம் பிரிவில் அருள்மிகு சுடலை மாடசாமி திருக்கோவில் உள்ளது. இந்த கோவில் 43 -வது ஆண்டு கொடை விழா நேற்று முன்தினம் தொடங்கியது. நேற்று ( செவ்வாய்)காலை 8 மணிக்கு அன்னதானமும் ,9 மணிக்கு திருமூர்த்தி மலையிலிருந்து தீர்த்தம் எடுத்து வருதல், 12 மணிக்கு கணியான் மகுடம்பாடுதல், 1 மணிக்கு மஞ்சள் நீராடுதல், 2 மணிக்கு அன்னதானம் 3 மணிக்கு சிவனடைந்த பெருமாள் கணியான்மகுடம் பாடுதல், இரவு 9 மணிக்கு அன்னதானம், 11 மணிக்கு அலங்கார பூஜை 11:30 மணிக்கு பிரம்ம சக்தி அம்மனுக்கு ஞாபகம் வளர்த்தல், சுடலைமாடசாமிக்கு கணியான் மகுடம் பாடுதல், நள்ளிரவு இரவு 12 மணிக்கு படைப்பு பூஜை, இரவு 1:30 மணிக்கு கணியான் கை, நாக்கு, கைவெட்டி சாமிக்கு ரத்தம் கொடுத்தல்,அதிகாலை 2 மணிக்கு சுவாமிக்கு திரளை உணவு கொடுத்தல், 2:30 மணிக்கு அருள்வாக்கு மற்றும் பிரசாதம் வழங்குதல் நிகழ்ச்சி நடந்ததது. நெல்லை மாவட்டம் சுத்தமல்லியை சேர்ந்த முத்துக்குமார் குழுவினரின் மகுடம் வாசிக்கும் நிகழ்ச்சியும், உடுமலை ஜல்லிபட்டி செல்வகுமாரின் நையாண்டி மேளம் நிகழ்ச்சியும் நடந்தது.கொடை விழாவையொட்டி கோவில் வண்ண விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டிருந்தது.நிகழ்ச்சியில் ஆர்.பி. கருணாகரன்,ஆர் கருணாமூர்த்தி,மகுடபதி மற்றும் முக்கிய பிரமுகர்களும் ஏராளமான பக்தர்களும் கலந்து கொண்டனர்.இதற்கான ஏற்பாடுகளை கோவில் தர்மகர்த்தா வி .மாரியப்பன் செய்திருந்தார்.