சமூக வலைத்தங்கள், முகநூல், இன்ஸ்டாகிராம் மற்றும் தொலைகாட்சிகளில் பிரபலங்கள் அழகு சாதனங்கள் மற்றும் பல்வேறு வகையான பொருள்கள் குறித்து விளம்பரம் செய்து வருகின்றனர்.
அந்த விளம்பரங்களில் காட்டப்படும் பொருள்களின் மீது தரம், நம்பிக்கை குறித்து பல கேள்விகள் எழுந்துள்ளது.
மேலும், பிரபலங்கள் விளம்பரம் செய்யும் பொருள்களின் தரத்தை சோதிக்காமல் விளம்பரம் செய்வதால் பல்வேறு பாதிப்புகளும், மோசடிகளும் நடப்பதாக குற்றச்சாட்டுகள் தொடந்து வந்துகொண்டு இருக்கிறது. இதுகுறித்த புகார் மத்திய அரசுக்கு தொடர்ந்து வந்து கொண்டே இருக்கிறது.
இந்நிலையில், மத்திய அரசின் நுகர்வோர் விவகாரங்கள், உணவு மற்றும் பொது விநியோக அமைச்சகம் தற்போது புதிய நெறிமுறைகளை வெளியிட்டுள்ளது. அதில், பொருள்களை விளம்பரம் செய்யும் நபர்கள் தெளிவான வார்த்தைகளில் அனைவருக்கும் புரியும் விதமான வார்த்தைகளை பயன்படுத்த வேண்டும். மேலும், அது பணம் கொடுத்து ஊக்குவிக்கும் விளம்பரமா, வெறும் ஆதாரமற்றதா என்பதை தெரிவிக்க வேண்டும்.
என்ன காரணத்தை அடிப்படையாகக் கொண்டு விளம்பரம் செய்யப்படுகிறது என்பது குறித்த முழு விவரங்களும் கட்டாயம் இடம் பெற்றிருக்க வேண்டும். மேலும், இத்தகைய விளம்பரங்கள் நுகர்வோரை தவறாக வழிநடத்துவதாக நிச்சயம் இருக்கக் கூடாது. பிரபலங்கள் தாங்கள் தனிப்பட்ட முறையில் அந்த குறிப்பிட்ட பொருள்களை பயன்படுத்தி அல்லது அனுபவித்து அதன் உண்மை தன்மையை தெரிந்து கொள்ளமால் எந்தவொரு தயாரிப்பு அல்லது சேவைகள் குறித்த பதிவுகள் எதையும் செய்யக் கூடாது.
பிரபலங்கள் விளம்பரத்தில் கூறப்படும் உரிமைகோரல்களை நிரூபிக்கும் நிலையில் விளம்பரதாரர் இருப்பதை எப்போதும் மதிப்பாய்வு செய்திருக்க வேண்டும். பிரபலங்கள், தங்கள் பார்வையாளர்களுடன் வெளிப்படைத்தன்மையையும் நம்பகத்தன்மையையும் பராமரிக்க இந்த வழிகாட்டுதல்களைக் கடைப்பிடிப்பது அவசியம்.
எந்தெவொரு தயாரிப்புகள் அல்லது சேவைகளை அங்கீகரிக்கும் போது பிரபலங்கள் தங்கள் பார்வையாளர்களை தவறாக வழிநடத்தாமல் இருப்பதையும், அவர்கள் நுகர்வோர் பாதுகாப்புச் சட்டம் மற்றும் தொடர்புடைய விதிகள் அல்லது வழிகாட்டுதல்களுக்கு இணங்குவதை உறுதி செய்வதை வழிகாட்டுதல்கள் நோக்கமாகக் கொண்டுள்ள இந்த வழிகாட்டுதல்களைக் கடைப்பிடிப்பது அவசியம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.