நடத்தையில் சந்தேகம்… நடுரோட்டில் மனைவியை அடித்து உதைத்த கணவர் கைது..!

கோவை செல்வபுரம் ,எல்.ஐ.சி. காலனி ,பாரதி ரோட்டை சேர்ந்தவர் பெரோஸ் (வயது 28) இவரது மனைவி பரண்யா (வயது 28 ) பெரோஸ் குடிப்பழக்கம் உடையவர். இதனால் தனது மனைவியின் நடத்தையில் சந்தேகப்பட்டு அவரை அடிக்கடி தகாத வார்த்தைகளால் பேசி வந்தார். இந்த நிலையில் நேற்று பரண்யா செல்வபுரம் பாரதி மெயின் ரோட்டில் நடந்து சென்றார் .அப்போது அங்கு வந்த பெரோஸ் அவரை நடுரோட்டில் வைத்து அடித்து உதைத்தார். அவரது சேலையை பிடித்து இழுத்து மிரட்டல் விடுத்தாராம். இதுகுறித்து பரண்யா செல்வபுரம் போலீசில் புகார் செய்தார். போலீசார் விரைந்து சென்று கணவர் பரோசை கைது செய்தனர்..