மனைவிக்கு வரதட்சணை கொடுமை – கணவர் கைது..!

கோவை, பெரியநாயக்கன்பாளையம் பக்கம் உள்ள கொண்டையம் பாளையம், செங்காடு பகுதியை சேர்ந்தவர் மகேஷ் .இவரது மகள் சிவரஞ்சனி ( வயது 19)காளிபாளையம், செங்குட்டை பகுதியை சேர்ந்தவர் கதிர்வேல் (வயது 29) தொழிலாளி. சிவரஞ்சனியும் கதிர்வேலும் உறவினர்கள் . இவர்கள் கடந்த 20 22- ஆம் ஆண்டு காதலித்து திருமணம் செய்து கொண்டனர். இந்த நிலையில் கதிர்வேல் வரதட்சணை கேட்டு சிவரஞ்சனியை அடித்து உதைத்து துன்புறுத்தி வந்துள்ளார் .மேலும் தகாத வார்த்தைகளால் திட்டி அவரது தாய் வீட்டுக்கு துரத்தி விட்டார் . இதை யடுத்து கதிர்வேல் கோபியை சேர்ந்த ஒரு பெண்ணை 2 – வது திருமணம் செய்து கொண்டாராம் . இது பற்றி தகவல்அறிந்த சிவரஞ்சனி அனைத்து பெண்கள் காவல் நிலையத்தில் புகார் செய்தார் . அதன் பேரில் போலீசார் கதிர்வேல் மீது வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து கைது செய்தனர். அவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில்அடைக்கப்பட்டார்..