கோவை ராமநாதபுரம் , ஆறுமுகம் நகரை சேர்ந்தவர் சண்முகம் இவரது மகள் சாந்தினி ( வயது 35) எம்.பி.ஏ. பட்டதாரி. இவரும் சென்னை அசோக் நகர் பகுதியைச் சேர்ந்த நாகராஜன் மகன் பிரசன்ன வெங்கடேஷ் (வயது 38) என்பவரும் மேத்ரி மோனி ‘ மூலம் கடந்த 3 மாதங்களுக்கு முன்பு இரண்டாவது திருமணம் செய்து கொண்டனர்.பிரசன்ன வெங்கடேஷ் சென்னையில் உள்ள தனியார் நிறுவனத்தில் ஊழியராக வேலை பார்த்து வருகிறார். திருமணம் முடிந்த பிறகு சாந்தினியை அவரது கணவர் சரிவர கவனிப்பதில்லை. இந்த நிலையில் பிரசன்ன வெங்கடேசுக்கு அவரது தாயார் பாலா மற்றொரு இடத்தில் 3 -வது திருமணம் முடிக்க முயற்சி செய்தாராம். இதை சாந்தினி கண்டித்தார். இதனால் ஆத்திரமடைந்த பிரசன்ன வெங்கடேஷ் , அவரது தாயார் பாலா ஆகியோர் சேர்ந்து சாந்தினிக்கு டார்ச்சர் கொடுத்து தாக்கினார்களாம். இதில் சாந்தினி காயம் அடைந்தார். பின்னர் சாந்தினி அணிந்து வந்த 65 பவுன் நகைகளை வாங்கி வைத்துக்கொண்டு அவரை துரத்தி விட்டனர் .இது குறித்து சாந்தினி ராமநாதபுரம் போலீசில் புகார் செய்தார். சப் இன்ஸ்பெக்டர் ரேணுகாதேவி இது தொடர்பாக விசாரணை நடத்தி கணவர் பிரசன்ன வெங்கடேஷ் ( வயது 38) அவரது தாயார் பாலா (வயது 72) ஆகியோர் மீது வரதட்சனை கொடுமை , தாக்குதல் உட்பட இரு பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்து தேடி வருகிறார்கள்..
எம்.பி.ஏ பட்டதாரி மனைவிக்கு வரதட்சணை கொடுமை – கணவர், மாமியார் மீது வழக்கு..!
