கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை, கீழ் குப்பம் அருகே உள்ள பனைமரத்துப்பட்டியை சேர்ந்தவர் வெங்கடேசன் (வயது 33) டாக்டர் .இவர் தனது மனைவி மற்றும் 2 குழந்தைகளுடன் கோவையில் வசித்து வருகிறார். கோவை அரசு மருத்துவமனையில் பணிபுரிந்து வந்த அவர் மருத்துவ பட்ட மேற்படிப்பு பயிற்சிக்காக கடந்த மாதம் 16ஆம் தேதி பொள்ளாச்சி அரசு மருத்துவமனைக்கு சென்றார் .இந்த நிலையில் வெங்கடேசன் கடந்த சில நாட்களுக்கு முன்பு பொள்ளாச்சி அரசு மருத்துவமனையில் உள்ள பெண்கள் கழிவறையில் ரகசியமாக பேனா கேமராவை பொறுத்தினார். பயிற்சி நர்சிங் மாணவிகள் அந்த கழிவறைக்கு சென்றனர் .அப்போது கழிவறையை சுத்தம் செய்யக்கூடிய பிரஷில் ரப்பர் பேண்ட் சுற்றப்பட்ட நிலையில் பேனா வடிவில் ஒரு கேமரா இருப்பதைக் கண்டு அதிர்ச்சி அடைந்தனர். உடனே அந்த கேமராவை எடுத்துக்கொண்டு மாணவிகள் வெளியே வந்தனர். அப்போது அங்கு நின்று கொண்டிருந்த டாக்டர் வெங்கடேசனிடம் கழிவறையில் ரகசிய கேமரா வைக்கப்பட்டு இருந்ததை காட்டினார்கள். அவரும் அந்த கேமராவை வாங்கிக் கொண்டு இதுகுறித்து விசாரிப்பதாக கூறி மாணவிகளை அனுப்பி வைத்தார். ஆனாலும் மாணவிகள் மருத்துவமனை கண்காணிப்பாளர் டாக்டர் ராஜவிடம் புகார் செய்தனர். பின்னர் மருத்துவமனையில் பொருத்தப்பட்டுள்ள சி.சி.டி.வி. கேமரா பதிவுகள் ஆய்வு செய்யப்பட்டது. அதில் டாக்டர் வெங்கடேசன் அந்த கழிப்பறைக்கு சென்று வருவது போன்ற காட்சிகள் பதிவாகி இருந்தன . இதையடுத்து அவரை அழைத்து விசாரித்த போது ரகசிய கேமரா வைத்ததை ஒப்புக்கொண்டார். இது குறித்து பொள்ளாச்சி நகர கிழக்கு காவல் நிலையத்தில் மருத்துவமனை கண்காணிப்பாளர் டாக்டர் ராஜா புகார் செய்தார். கோவை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு டாக்டர். கார்த்திகேயன் உத்தரவின் பேரில் போலீசார் டாக்டர் வெங்கடேசனை பிடித்து விசாரணை நடத்தினர். விசாரணையில் அவர் ஆன்லைன் மூலம் ரகசிய கேமரா வாங்கி அதை பெண்கள் கழிவறையில் வைத்து கேமராவில் பதிவான காட்சிகளை செல்போன் மூலம் பார்த்து ரசித்ததும் தெரியவந்தது. வெங்கடேசனிடம் இருந்து செல்போன் மெம்மரி கார்டு, ஆகியவற்றை போலீசார் பறிமுதல் செய்தனர் ..அவற்றை மேலும் ஆய்வுக்காக அனுப்பி வைத்தனர். டாக்டர் வெங்கடேசனை தகவல் தொழில்நுட்பத்தை தவறாக பயன்படுத்துதல், பெண்களை தவறாக சித்தரித்தல் ஆகிய இரு பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்து போலீசார் கைது செய்ததனர்.அவரை பொள்ளாச்சி நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தினர். நீதிபதிஅவரை வருகிற 13 – ந் தேதி வரை நீதிமன்ற காவிரியில் வைக்க உத்தரவிட்டார்.இதை யடுத்து அவர் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டார். இந்த சம்பவம் பொள்ளாச்சியில் பெரும் பரபரப்பு ஏற்படுத்தி உள்ளது..
அரசு மருத்துவமனை பெண்கள் கழிவறையில் ரகசிய பேனா கேமரா பொறுத்தி ரசித்த டாக்டர் கோவை சிறையில் அடைப்பு..!
