கோவை ஏப் 26 கோவைபக்கம் சூலூர் ,பாரதி நகரை சேர்ந்தவர் நாகராஜ் ( வயது 54 )ஆட்டோ டிரைவர். இவர் பைனான்ஸ் நிறுவனத்தில் கடன் வாங்கி ஆட்டோ வாங்கி இருந்தார். அதற்கான பணத்தை உரிய நேரத்தில் செலுத்தவில்லை. இதனால் பைனான்ஸ் நிறுவனத்தார் ஆட்டோவை பறிமுதல் செய்துவிட்டு சென்றுவிட்டனர்.இதனால் பணம் வாங்குவதற்காக மதுக்கரை சீராபாளையத்தில் உள்ள தனது மகள்லாவண்யா வீட்டுக்கு நேற்று சென்றிருந்தார்.அவரிடம் பணம் கேட்டார்.அதற்கு அவர் மாதக்கடைசி ஆதலால் அடுத்த மாதம் தருவதாக கூறினார் .இந்த நிலையில் அங்கிருந்து வந்த நாகராஜ் போடி பாளையம் – செந்தூர் கார்டன் ரோட்டில் மதுவில் விஷம் கலந்து குடித்து தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து அவரது மகள் லாவண்யா மதுக்கரை போலீசில் புகார் செய்தார் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
பைனான்சியர் ஆட்டோவை பறிமுதல் செய்ததால் டிரைவர் தற்கொலை.
