அரசு பேருந்தில் பயணிகளை தரக் குறைவாக பேசும் ஓட்டுநர், நடத்துனர்: கோவையில் பெண்களுக்கு நடக்கும் அவலம்…
கோவையில் சமீப காலமாக அரசு பேருந்து ஓட்டுநர் மற்றும் நடத்துனார்கள் பயணிகளை ஆபாசமாகவும் மிகவும் கீழ்த் தரமாகவும் பேசி வருவது மக்களிடையே அதிருப்தி ஏற்படுத்தி உள்ளது . இன்று பெண் ஒருவர் கோவை காந்திபுரம் பேருந்து நிலையத்தில் நின்று கொண்டு இருந்த த.நா 38 நா 2446 எண் கொண்ட பேருந்து நடந்துனரிடம் சென்று இந்த பேருந்து சிவானந்தா காலனிக்கு செல்லுமா? என்று கேட்டதற்கு
” நீ வேற வண்டிய பார்த்து கேளுமா ?… சாகப் போற வயசுல கிளம்பு போகும் வண்டியில் கேள்வி கேட்டுகிட்டு இருக்க வேற வண்டிய போய் பாருமா ?
என்று கீழ்த்தரமாக பேசிய அந்த பேருந்து ஓட்டுநர் மற்றும் நடத்துனர். மேலும் இது குறித்து உடன் சென்ற அவர் மகள் கேள்வி கேட்டதற்கு நான் நினைத்தால் இங்கிருந்து எந்த வண்டியின் செல்லாது. முடிந்தால் நீ யாரிடம் வேண்டுமென்றால் கூறு என்னை ஒன்றும் புடுங்க முடியாது பார்க்கிறாயா? என்று மிரட்டி ஆபாசமாக பேசி உள்ளார்.
இந்த சம்பவம் குறித்த செல்போன் காட்சிகள் தற்பொழுது வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.