கோவையில் மது பாட்டிலால் குத்தி டிரைவர் படுகொலை..!

திண்டுக்கல் மாவட்டத்தை சேர்ந்தவர் ஆறுமுகம் (30). இவர் கோவை சுந்தராபுரம் செட்டிப்பாளையம் ரோட்டில் வாடகைக்கு வீடு எடுத்து தங்கி இருந்து தனியார் நிறுவனத்தில் மினி லாரி டிரைவராக பணிபுரிந்து வந்தார். இவருடன் சியாஷ் (35) என்பவரும் தங்கிருந்தார். இந்த நிலையில் நேற்று இரவு இருவரும் மது குடித்ததனர். அப்போது சியாஷ் டிவி.,யில் பாட்டை அதிக சத்தம் வைத்து கேட்டுள்ளார். அவரிடம் ஆறுமுகம் பாட்டு சத்தத்தால் தனக்கு தூங்க முடியவில்லை என்று டிவி.,யின் சத்தத்தை குறைக்க கூறியுள்ளார். ஆனால் சியாஷ் பாட்டின் சத்தத்தை குறைக்கவில்லை. இதனால் இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டு தகராறாக மாறியது. இதில் ஆத்திரம் அடைந்த சியாஷ் வீட்டில் இருந்த மது பாட்டிலை எடுத்து உடைத்து ஆறுமுகத்தை சரமாரியாக குத்தியுள்ளார். பலத்த காயம் அடைந்த ஆறுமுகம் ரத்த வெள்ளத்தில் மயங்கி விழுந்தார். அவரின் சத்தத்தை கேட்டு அக்கம் பக்கத்தினர் ஓடி வந்தனர். அவர்கள் வருவதை பார்த்து சியாஷ் அங்கிருந்து தப்பிஓடிவிட்டார். பின்னர் மயங்கி கிடந்த ஆறுமுகத்தை மீட்டு கோவை அரசு மருத்துவமனையில்சேர்த்தனர். அங்கு அவர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து சுந்தராபுரம் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து ஆறுமுகத்தின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.இதுகுறித்து கொலை வழக்கு பதிவு செய்து சியாஷ் எங்கு தப்பி சென்றார்? அவர் எந்த ஊரை சேர்ந்தவர் ? என விசாரணை நடத்தி அவரை தேடி வருகின்றனர்.