கோவையில் போதை மருந்து, ஊசி கடத்தல் – பெண் உட்பட 6 பேர் கைது..!

போதை மருந்து கடத்தல்:.பெண் உட்பட 6 பேர் கைது .கோவை நவம்பர் 27 கோவை கரும்புக்கடை போலீஸ் இன்ஸ்பெக்டர் தங்கம். சப் இன்ஸ்பெக்டர் முருகன் ஆகியோர் நேற்று கரும்புக்கடை சாரமேடு ரோட்டில் ரோந்து சுற்றி வந்தனர். அப்போது அங்கு சந்தேகப்படும்படி நின்று கொண்டிருந்த 6 பேர் கொண்ட கும்பல் போலீசை கண்டதும் ஓட்டம் பிடித்தது . அவர்களை போலீசார் துரத்தி பிடித்தனர். அவர்களிடமும் அவர்களது வீட்டிலும் சோதனை நடத்தப்பட்டது. அங்கு போதை மருந்து, ஊசி , ரூ 1,100 பணம் இருந்தது. கண்டுபிடிக்கப்பட்டது. இவைகள்பி பறிமுதல் செய்யப்பட்டன. இதையடுத்து 6 பேரும் கைது செய்யப்பட்டனர். விசாரணையில் அவர்கள் குனியமுத்தூர் மாங்கல்யா கார்டனைச் சேர்ந்த அப்பாஸ் (வயது 29) காந்திபார்க் சுந்தரம் வீதியைச் சேர்ந்த மணி (வயது 21) உக்கடம் புல்லுக்காடு ஹவுசிங் யூனிட்உமா சங்கர் மனைவி குண சுந்தரி ( வயது 29) தடாகம் ரோடு விஷ்ணு (வயது 27)லாலி ரோடு பூச்சி கிருஷ்ணன் (வயது26) ஆர் எஸ் புரம் ,சுப்பிரமணியம் ரோடு அப்துல் சமது (வயது 25 )ஆகியோர் என்பது தெரிய வந்தது. 6 பேரும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்..