போதைப்பொருள் விழிப்புணர்வு கலந்தாய்வு கூட்டம்..!

ஆவடி காவல் ஆணையரகம் சார்பாக போதைப்பொருட்களின் பழக்கத்திற்கு எதிராக பல்வேறு தடுப்பு நடவடிக்கைகள் மற்றும் விழிப்புண்ர்வுகள் நிகழ்ச்சிகள் பள்ளி கல்லூரி மாணவர்கள், இளைஞர்கள் மற்றும் பொதுமக்களிடையே ஏற்படுத்தி வருவதன் தொடர்ச்சியாக, ஆவடி காவல் ஆணையரகத்தில் காவல் ஆணையாளர் .கி.சங்கர், அவர்களின் தலைமையில் கல்லூரி முதல்வர்கள் பங்கேற்ற போதைப் பொருட்கள் குறித்து “ஆன்டி டிரக் கிளப்” தொடங்குவது தொடர்பான கலந்தாய்வு கூட்டம் நடைபெற்றது.

ஆவடி காவல் ஆணயைரகத்திற்குட்பட்ட பகுதிகளில் செயல்பட்டு வரும் கல்லூரிகளில் பயிலும் மாணவ மாணவிகளிடையே போதை போதைப் பொருட்களின் பயன்பாடுகளால் ஏற்படும் தீமைகள் மற்றும் அதன் பயன்பாட்டை முற்றிலும் ஒழிப்பது குறித்த வழிமுறைகள் மற்றும் விழிப்புணர்வை ஏற்படுத்தி அவர்களை நல்வழிப்படுத்தும் விதமாக அனைத்து கல்லூரிகளிலும் “ஆன்டி டிரக் கிளப்” (Anti-Drug Club) என்ற அமைப்பை ஏற்படுத்துவதற்காக திருமுல்லைவாயல் S.M நகர் போலீஸ் கன்வென்சன் சென்டரில் காவல் ஆணையாளர் தலைமையில் கல்லூரி முதல்வர்கள் மற்றும் கல்லூரி நிர்வாகத்தை சேர்ந்தவர்கள் பங்கேற்ற கலந்தாய்வு கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் காவல் ஆணையாளர் அவர்கள் ஆன்டி டிரக் கிளப் (Anti-Drug Club) என்ற அமைப்பை அனைத்து கல்லூரிகளிலும் 20.09.2024 தேதிக்குள் அமைக்கப்பட்டு செயல்படுத்தி மாணவர்கள் இடையே போதை பழக்கதினால் ஏற்படும் தீங்குகள் மற்றும் பயன்பாட்டை ஒழிப்பதற்கான தொடர் நடவடிக்கைகளை மேற்கொண்டு மாதம் தோறும் ஆய்வு கூட்டம் நடத்தவும் காவல் ஆணையாளர் அவர்கள் அறிவுறுத்தினார்கள்..