போதைப் பொருட்கள் இல்லாத தமிழ்நாடு உறுதிமொழி.!!

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அவர்கள் தலைமையில் ஏற்கப்பட்டு போதை பொருள் உற்பத்தி மற்றும் சட்டவிரோத கடத்தலை ஒழிப்பதில் சிறப்பாக பணியாற்றிய காவல் அலுவலர்கள் மற்றும் காவலர்களுக்கு 2024 ஆம் ஆண்டிற்கான தமிழ்நாடு முதலமைச்சர் காவலர் சிறப்பு பதக்கங்களை வழங்கி கௌரவித்தார். தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அவர்கள் தலைமையில் சென்னை பல்கலைக்கழகத்தில் காவல்துறை சார்பில் நடைபெற்ற போதைப் பொருட்கள் இல்லாத தமிழ்நாடு நிகழ்ச்சியில் கல்லூரி மாணவ மாணவியர்கள் போதை பொருட்கள் ஒழிப்பு குறித்து உறுதிமொழியை ஏற்றுக் கொண்டனர். மேலும் மாநிலத்தில் போதை உற்பத்தி மற்றும் சட்டவிரோத சட்டவிரோத கடத்தலை ஒழிப்பதில் சிறப்பாக பணியாற்றிய காவல்துறை அலுவலர்கள் மற்றும் காவலர்களுக்கு 2024 ஆம் ஆண்டிற்கான தமிழ்நாடு முதலமைச்சர் காவலர் சிறப்பு பதங்கங்களை வழங்கி கௌரவித்தார்.போதை ஒழிப்பு தொடர்பான தொடர்ச்சியான விழிப்புணர்வு நடவடிக்கைகளை மேற்கொள்வதற்காக தமிழ்நாடு காவல்துறை சார்பில் 11.8.2022 அன்று முதலமைச்சர் அவர்களால் சென்னை கலைவாணர் அரங்கத்தில் போதைப் பொருட்கள் இல்லாத தமிழ்நாடு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடத்தப்பட்டு உறுதிமொழி ஏற்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து 2023 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 10 அன்று நடைபெற்ற மாநில அளவில் போதை பொருள் ஒழிப்பு மாநாட்டில் தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் போதைப் பொருட்கள் இல்லாத தமிழ்நாடுஇல்லாத அறைக் கூவல் விடுத்தார். இந்நோக்கத்தினை அடைந்திட தமிழ்நாடு காவல்துறை மற்றும் அமலாக்கப் பணியகம் குற்றப்புலனாய்வு துறை ஆகியவை போதை ப் பொருட்கள் மன மயக்கம் பொருட்களின் சட்ட விரோத விற்பனை மற்றும் கடத்தலுக்கு எதிராக கடுமையான நடவடிக்கைகளை எடுத்து வருகின்றன.கடந்த ஆண்டில் மொத்தம் 10256 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு 14770 குற்றவாளிகள் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்களிடமிருந்து 23364 கிலோ கஞ்சா 953 கிலோ ஹெராயின் 39910 மாத்திரைகள் மற்றும்1239 கிலோ மற்ற போதை பொருட்கள் கஞ்சா சாக்லேட் மெத்தா பிடமை ன் ஆம்பிடா மை ன் மற்றும் மெத்தா குலான் கைப்பற்றப்பட்டுள்ளது. நடப்பு ஆண்டில் 2024 ஆம் ஆண்டு ஜூன் மாதம் வரை மொத்தம் 4522 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு 7123 நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். இதன் விளைவாக 11081 கிலோ கஞ்சா 74016 மாத்திரைகள் மற்றும் 28370 கிலோ மற்ற போதைப் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. மேலும் போதைப்பொருள் விற்பனை மற்றும் கடத்தலில் ஈடுபட்டு லாபம் பெற்ற குற்றவாளிகளுக்கு நீதி விசாரணை நடத்தப்பட்டு அவர்களின் அசையும் மற்றும் அசையா சொத்துக்கள் சட்ட விதிகளின் கீழ் பறிமுதல் செய்யப்பட்டுவருகின்றது.கடந்த 11.8.2022 முதல் இதுவரை 76 போதை பொருள் வழக்குகளில் சம்பந்தப்பட்ட 154 குற்றவாளிகளுக்கு எதிராக மீதி விசாரணை மேற்கொள்ளப்பட்டு அவர்களின் 45 எண்ணிக்கையிலான ரூபாய் 18.15 கோடி மதிப்புடைய அசையும் மற்றும் அசையா சொத்துக்கள் முடக்கப்பட்டுள்ளது. மேலும் போதை பொருள் மற்றும் உள வெறி ஊட்டும் பொருட்கள் சட்ட வழ களில் தொடர்புடைய குற்றவாளிகளின் சுமார் 5 லட்ச ரூபாய் இருப்பு கொண்ட 8800 வங்கி கணக்குகள் முடக்கப்பட்டுள்ளன. கடுமையான சட்ட நடவடிக்கை மட்டுமல்லாமல் தேவை குறைப்பு என்ற இலக்கை அடைவதற்காக போதைப் பொருள் பழக்கத்திற்கு எதிராக இளைஞர்கள் குறிப்பாக பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்கள் பொதுமக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தும் தமிழ்நாடு அமலாக்க பணிவகம் குற்றப்புலனாய்வு பிரிவு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து அதன் முதன்மை திட்டமான drive against drugs கீழ் பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன.கல்வி நிறுவனங்கள் தொழிற்சாலைகள் மற்றும் மக்கள் கூடும் வணிக வளாகங்கள் விளையாட்டுப் போட்டிகள் நடைபெறும் இடங்கள் திருவிழாக்கள் நடைபெறும் இடங்களில் விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகின்றன. கடந்த 2023 ஆம் ஆண்டில் சுமார் 30 லட்சம் மக்கள் கலந்து கொண்ட மொத்தம்110603 விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டுள்ளன. நடப்பு ஆண்y20டில் 2024 ஜூன் வரை 8.20 லட்சம் பொதுமக்கள் கலந்து கொண்ட 23350 விழிப்புணர்வு நிகழ்ச்சி நடத்தப்பட்டுள்ளன. முதலமைச்சர் தலைமையில் போதைப்பொருள் ஒழிப்பு உறுதிமொழி யினை சுமார் 1500 கல்லூரி மாணவ மாணவியர்கள் ஏற்றுக்கொண்டனர். தமிழக முதல்வர் உத்தரவுபடி மாநிலம் முழுவதும் தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருட்கள் விற்பனையை தடுக்க காவல்துறை உணவு பாதுகாப்பு மற்றும் மருந்து நிர்வாகத் துறை அதிகாரிகள் உள்ளடக்கிய 391 குழுக்கள் கடந்த 2023 நவம்பரில் தீவிர சோதனைகள் மேற்கொண்டதில் கடந்த2024 ஜூலை வரையில்19332 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு 177 டன் புகையிலை பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. குற்றவாளிகளிடம் இருந்து ரூபாய் 13.16 கோடி அபராதம் வசூலிக்கப்பட்டது உடன் 8650 கடைகள் சீல் வைக்கப்பட்டுள்ளது. முதலமைச்சர் காவலர் சிறப்பு பதக்கங்களை தேனி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆர் சிவபிரசாத் சேலம் மத்திய புலனாய்வு பி ஜெகநாதன் சென்னை மத்திய புலனாய்வு சார்பு ஆய்வாளர் ராஜ்குமார் மதுரை மாவட்டம் ஒத்தக்கடை போக்குவரத்து சார்பு ஆய்வாளர் ஆர் அருண் ராமநாதபுரம் மாவட்டம் ஆர்எஸ் மங்கலம் காவல் நிலைய முதல் நிலை காவலர் ஆர் துரை ஆகியோருக்கு முதலமைச்சர் உருதுகளை வழங்கி கௌரவித்தார். மாநிலம் முழுவதும் கைப்பற்றப்பட்ட சுமார் 13 775 கிலோ போதை பொருட்கள் மற்றும் மன மயக்க பொருட்கள் கைப்பற்றப்பட்டு செங்கல்பட்டு சேலம் தஞ்சை மற்றும் திருநெல்வேலி ஆகிய இடங்களில் தகுந்த பாதுகாப்புடன் அழிக்கப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் தலைமைச் செயலாளர் சிவதாஸ் மீனா உள்துறை மற்றும் மதுவிலக்கு ஆயத்தீர்வு துறை கூடுதல் செயலர் தீரஜ் குமார் காவல்துறை தலைமை இயக்குனர் சங்கர் ஜீவா ல் அமலாக்க பணியக காவல்துறை கூடுதல் இயக்குனர் முனைவர் ஆ. அமல்ராஜ் சென்னை பெருநகர காவல் துறை ஆணையர் ஆ. அருண் மற்றும் பலர் ஆர்வத்துடன் பங்கேற்றனர்.