தமிழ்நாட்டில் போதை பொருள் கடத்தல் மற்றும் விற்பனை குறைந்ததா..?

சென்னை : தமிழ்நாட்டில் போதைப் பொருள் கடத்தல் மற்றும் விற்பனை அதிகரித்து வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் போதை பொருள் குற்றவாளிகளுடன் பல காவலர்கள் உடந்தையாக இருப்பதாகவும் அவர்கள் மீது நடவடிக்கை எடுப்பதாக 850 காவலர்களின் பட்டியலை மாநில புலனாய்வு பிரிவினர் காவல்துறை தலைமை இயக்குனரிடம் ஒப்படைத்ததாக வெளியிடப்பட்டிருந்தது. மேற்கூறிய செய்தி கட்டுரையில் குறிப்பிட்டுள்ள குற்றச்சாட்டுகள் உண்மைக்கு புறம்பானவை. மேலும் அடிப்படை ஆதாரம் அற்றவை. இது போன்ற பட்டியல் எதுவும் மாநில உளவு பிரிவால் வழங்கப்படவில்லை.மேலும் உண்மைகளை சரி பார்க்காமல் அந்த செய்தி கட்டுரை வெளியிடப்பட்டுள்ளது. தமிழ்நாடு அரசு மற்றும் தமிழ்நாடு காவல்துறையும் போதை இல்லா மாநிலமாக தமிழ்நாட்டை உருவாக்க அதிகபட்ச முக்கியத்துவம் வழங்கி தீவிரமாக கண்காணித்து பல நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. மேலும் தமிழ்நாடு காவல்துறை கஞ்சா மற்றும் பிற போதைப் பொருட்களை சட்டவிரோதமாக விற்பனை செய்து கடத்தும் குற்றவாளிகள் மீது கடும் நடவடிக்கை எடுத்து வருகிறது. கடந்த2021 முதல் 2024 ஆகஸ்ட் வரையிலான 4 ஆண்டுகளில்48725 குற்றவாளிகள் மீது 39893 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது.இதில் சுமார் 87270 கிலோ கிராம் கஞ்சா 22817 கிலோ ஹெராயின் 205724 போதை மாத்திரைகள் மற்றும் 1835 கிலோ கிராம் மெ த்தம் பெட்டமின் ஆம் பெடமின் சரஸ் பெட்ரின் மெத்த குலோ ன் போன்ற போதை பொருட்கள் கைப்பற்றப்பட்டுள்ளன. இவை கடந்த ஆண்டுகளை ஒப்பிடும்போது போதைப் பொருட்களுக்கு எதிராக பதியப்பட்ட வழக்குகள் மற்றும் கைது நடவடிக்கைகள் பல மடங்கு அதிகமாகும்.மேலும் தீவிர தீவிர செயல்பாடு உடைய வழக்கமான குற்றவாளிகளில் 1907 பேர் கு ண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்களிடமிருந்து கடத்தல் பொருட்கள் கொண்டு செல்வதற்கு பயன்படுத்தப்பட்ட 2 படகுகள் உட்பட மொத்தம்5357 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. போதைப் பொருட்கள் கடத்தல் தொடர்பாக பெரிய அளவில் பல வழக்குகள் பதியப்பட்டுள்ளன. கடந்த ஜனவரி16 2023 அ ன்று தேனி மாவட்ட காவல்துறை ஆண்டிபட்டியில் ஒரு லாரியில் மீன் கருவாட்டு பொட்டலங்கலோடு மறைத்து வைத்து கொண்டு செல்லப்பட்ட 1200 கிலோ கஞ்சா கைப்பற்றப்பட்டு 3 குற்றவாளிகள் கைது செய்யப்பட்டனர். மதுரை மாநகரம் எஸ் எஸ் காலனி காவலர்கள்15.2.2023 அன்று இலங்கைக்கு கடத்த இருந்த 951 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டு குற்றவாளிகள்கைது செய்யப்பட்டனர். மேலும்9.5.2023 அன்று மதுரை மாநகரம் கீர த்துறை காவலர்களால் சாத்தான்குளம் அருகே வேலன் புதுக்குளம் கிராமத்தில் 2090 கிலோ கிராம் கஞ்சா கைப்பற்றப்பட்டு 6 குற்றவாளிகள் கைது செய்யப்பட்டனர்.

தூத்துக்குடி மாவட்ட மதுவிலக்கு அமலாக்க பிரிவினர் காவலர்களால் 2023 ஆகஸ்ட் 22ம் தேதி கயத்தாறு டோல் பிளாசாவில் ஒரு மினி லாரியில் ரகசிய அறை ஏற்படுத்தி மறைத்து வைத்திருந்த 600 கிலோ கிராம் கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது. பெரிய அளவில் 200 கிலோவிற்கும் கஞ்சாவை கடத்தியதாக 19 முக்கிய வழக்குகளில் மொத்தம்7370 கிலோ கிராம் கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.2022 ஜூன் முதல் 2024 ஜூன் வரையிலான இரண்டு ஆண்டுகளில் போதைப் பொருள் விற்பனை மற்றும் கடத்தல் சம்பந்தமாக ndps வழக்குகளில் தொடர்புடைய 77 குற்றவாளிகளுக்கு எதிராக நிதி விசாரணை மேற்கொள்ளப்பட்டு ரூபாய் 18.03 கோடி மதிப்புடைய 45 அசையும் அசையா சொத்துக்கள் முடக்கப்பட்டுள்ளன. பொருள் விற்பனை மற்றும் கடத்தல் சம்பவங்களை கட்டுப்படுத்த ndps வழக்குகளில் நீதிமன்ற பினையம் பெற்ற முந்தைய குற்றவாளிகள் மற்றும் குற்றம் சாட்டப்பட்டவர்கள் என மொத்தம் 35940 குற்றவாளி களின் விவரங்கள்2019 முதல் தயாரிக்கப்பட்டு தீவிரமாக கண்காணிக்கப்பட்டு வரப்படுகிறது. போதைப் பொருள் கடத்தல் மற்றும் விற்பனை குற்றங்கள் மீது கடுமையான சட்ட நடவடிக்கைகள் எடுக்கப்படுவதோடு வழக்குகளின் மீது விரைவான தீர்வு காண தொடர்ச்சியான முயற்சிகள் எடுக்கப் படுகிறது. இதனால் ndps சட்ட வழக்குகளில் சரியான நேரத்தில் தண்டனை வழங்கப்படுவது உறுதி செய்யப்பட்டுள்ளது. தொடர் சட்ட நடவடிக்கைகளால் 2002 முதல் ஜூன்2024 வரை பல்வேறு நீதிமன்றங்களால் மொத்தம்7287 வழக்குகளில் தீர்ப்புகள் வழங்கப்பட்டுள்ளன. அதில் 5767(79.14./.) வழக்குகள் தண்டனையில் முடிவடைந்துள்ளன. தமிழ்நாடு காவல்துறையின் இவ்வாறான நடவடிக்கைகள் போ தைப் பொருள் கடத்தல் விற்பனை மற்றும் பயன்பாட்டை முற்றிலுமாக ஒழிக்கும் முயற்சியில் தீவிரமாக ஈடுபட்டு வருவதை காட்டுகிறது..