வால்பாறையில் குடிபோதையில் மூதாட்டி கொலை – இளைஞர் கைது..!

கோவை மாவட்டம் வால்பாறை அருகே உள்ள லோயர் பாரளை எஸ்டேட்ட் குடியிருப்பில் நேற்று முன்தினம் சரோஜினி வயது 72 என்பவர் தலை மற்றும் உடலில் ரத்த காயங்களுடன் கொலை செய்யப்பட்டிருந்தார் இச்சம்பவம் குறித்து கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் உத்தரவிற்கிணங்க காவல் கூடுதல் கண்காணிப்பாளர் சுரேஷ் தலைமையில் துணை கண்காணிப்பாளர்கள் ஸ்ரீநிதி, கிருஷ்ணன் மற்றும் வால்பாறை காவல் ஆய்வாளர் ஆனந்தகுமார் ஆனைமலை காவல் ஆய்வாளர் தாமோதரன் அடங்கிய காவல் துறை படையினர் சடலத்தை மீட்டு கோவை அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்து மர்ம கொலை பற்றி மோப்பநாய் உதவியுடன் தீவிரவிசாரணை மேற்க்கொண்டதைத்தொடர்ந்து அதே பகுதியை சேர்ந்த காட்டப்பன் என்பவரின் மகன் ரங்கநாதன் வயது 24 என்பவரை நேற்று இரவு கைது செய்து விசாரணை மேற்க் கொண்டதில் மூதாட்டி வீட்டருகே மதுபோதையில் அருவாவுடன் சென்று கொண்டிருந்த போது ஏற்ப்பட்ட வாக்குவாதத்தில் ஆத்திரமடைந்து கையில் வைத்திருந்த அருவாவின் பின்புறம் திருப்பி மூதாட்டியின் உச்சந்தலையில் ஓங்கி அடித்து ரத்த காயத்துடன் நிலைகுலைந்த நிலையில் இருந்த மூதாட்டியை வீட்டிற்கு ள் தூக்கிச் சென்று போட்டுவிட்டு பின்வாசல் வழியாக வந்து முன்வாசலை பூட்டிவிட்டு தப்பிச்சென்ற தாகவும் தெரிவித்துள்ளார். இதனைத் தொடர்ந்து மூதாட்டியை கொலை கொலை செய்ததாக கூறிய ரங்கநாதனை காவல் துறையினர் கைது செய்த நிலையில் வழக்கு பதிவு செய்து கொலை செய்த இளைஞரை வால்பாறை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தியுள்ளர் . இச்சம்பவம் வால்பாறை சுற்றுவட்டாரப் பகுதி மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது..