இந்தோனேசியாவில் நிலநடுக்கம்… ரிக்டர் அளவில் 5.3 ஆகப் பதிவு – பீதியில் மக்கள் ..!

ந்தோனேசியாவின் பப்புவா மாகாணத்தில் இன்று காலை 5.3 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டதாக அந்நாட்டின் புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இதுதொடர்பாக புயிவியல் ஆய்வு மையம் வெளியிட்ட தகவலின்படி,

ஜகார்த்தா நேரப்படி காலை 07:22 மணிக்கு உள்நாட்டில் நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கம் மம்பெரமோ தெங்கா ரீஜென்சிக்கு வடகிழக்கே 96 கிமீ தொலைவில் 26 கிமீ ஆழத்தில் ஏற்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளது.

சுனாமி ஏற்படுவதற்கான எந்த எச்சரிக்கையும் இதுவரை வெளியிடப்படவில்லை. மேலும் விவரங்கள் காத்திருக்கின்றன.

புவித் தகடுகள் ஒன்றுடன் ஒன்று உராயும் ‘நெருப்பு வளையம்’ என்றழைக்கப்படும் பகுதியில் இந்தோனேசியா அமைந்துள்ளதால் அங்கு அடிக்கடி நிலநடுக்கங்கள் ஏற்படுகின்றன.