திருச்சியில் இதயத்துடிப்பை பதிவு செய்து கைபேசிக்கு அனுப்பும் கருவி அறிமுகம்.
ECG இதயத் துடிப்பை பதிவு செய்து கைபேசிக்கு அனுப்பக்கூடிய கையடக்க கருவியின் வெளியீட்டு நிகழ்ச்சி திருச்சி கண்டோன்மெண்டில் அமைந்துள்ள ப்ரீஸ் ஹோட்டலில் நடைபெற்றது.
வி.ஆர். டெல்லா நிறுவனத்தின் நிறுவனர் மணிகண்ட ராமன் இசிஜி இயந்திரத்தை அறிமுகம் செய்து வைத்தார். நிகழ்வில் ஹர்ஷமித்ரா கேன்சர் இன்ஸ்டியூட் மருத்துவர் கோவிந்தராஜன், மருத்துவர் சிவம்,பிரண்ட்லைன் மருத்துவமனையின் நிறுவனர் ராதாகிருஷ்ணன்,மாருதி மருத்துவமனையின் மருத்துவர் சிலம்பரசன்,மருத்துவர் மோகன், மருத்துவர் சசி பிரியா,ஆகியோர் இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர். கையடக்க ஈசிஜி கருவியானது மருத்துவமனைகளுக்கும் ஏன் பொதுமக்களும் இதை வாங்கி வைத்துக்கொண்டு பயன்படுத்திக் கொள்ளலாம் என்றனர். இதன் விலை 40 ஆயிரம் முதல் ரூபாய் 45 ஆயிரம் வரை மிகக் குறைவான விலையே இதை அனைவரும் வாங்கி பயன்பெறுமாறு வி ஆர் டெல்லா நிறுவனத்தினர் தெரிவித்தனர்