மதுரை வலையங்குளத்தில் அதிமுக பொதுச்செயலாளரும், எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் நேற்று அதிமுக “பொன்விழா எழுச்சி” மாநாடு பிரமாண்டமாக நடைபெற்றது.
இந்த மாநாட்டை பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி 51 அடி உயர கொடிக்கம்பத்தில் கட்சியின் கொடியை ஏற்றித் தொடங்கி வைத்தார்.
இதில் கலை நிகழ்ச்சிகளுக்காக 65 ஆயிரம் சதுர அடி பரப்பளவில் பிரமாண்ட மேடை அமைக்கப்பட்டது. இந்த மாநாட்டில் லட்சக்கணக்கானோர் கலந்து கொண்டனர். இந்த நிலையில், எடப்பாடி பழனிசாமிக்கு இந்த மாநாட்டில் ‘புரட்சிதமிழர்’ என்ற பட்டம் வழங்கப்பட்டது.
இதுகுறித்து தஞ்சையில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த டிடிவி தினகரன் அவர்கள், இபிஎஸ் க்கு புரட்சி தமிழர் என்கிற பட்டத்திற்கு பதில் துரோக தமிழர் என பட்டம் கொடுக்கலாம். பழனிசாமி நடத்தியது எழுச்சி மாநாடு அல்ல வீழ்ச்சி மாநாடு. மக்களின் எண்ணத்துக்கு எதிராக செயல்படுவதால் முதல்வருக்கும் பழனிசாமிக்கும் வேறுபாடு இல்லை. பாஜகவுடன் உறவு கிடையாது. கூட்டணி குறித்து சரியான நேரத்தில் முடிவு எடுக்கப்படும் என தெரிவித்துள்ளார்.