அதிமுக பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமியை அங்கீகரித்தது தலைமை தேர்தல் ஆணையம்..
எடப்பாடி பழனிசாமி அதிமுக பொதுச்செயலாளரானது செல்லும் என தலைமை தேர்தல் ஆணையம் அங்கீகரித்து அறிவித்துள்ளது. இந்திய தலைமை தேர்தல் ஆணையம் அங்கீகரித்ததை அடுத்து எடப்பாடி பழனிசாமிக்கு இரட்டை இலை சின்னம் கிடைத்தது. அதன்படி, கர்நாடக சட்டமன்றத் தேர்தலில் இரட்டை இலை சின்னத்தை எடப்பாடி பழனிச்சாமி தரப்பிற்கு வழங்க உத்தரவிட்டுள்ளது.
அதிமுக பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமியை அங்கீகரிக்க கூடாது என்று ஓபிஎஸ் தரப்பில் தலைமை தேர்தல் ஆணையத்தில் முறையீட்டு இருந்தனர். இதன்பின், தன்னை அதிமுக பொதுச்செயலாளராக அங்கீகரிக்க வேண்டும் என்று கர்நாடகா தேர்தலை சுட்டிகாட்டடி எடப்பாடி பழனிசாமி தரப்பில் தேர்தல் ஆணையத்தில் முறையீடு செய்யப்பட்டது.
அதிமுக பொதுச்செயலாளர் விவகாரம் தொடர்பாக தேர்தல் ஆணையம் இன்று முடிவை அறிவிக்கும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், அதன்படி, அதிமுக பொதுச்செயலாளராக பழனிசாமியை அங்கீகரித்து, இரட்டை இலை சின்னத்தை வழங்கி தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.