கோவை சிட்கோ எம். ஜி ,ஆர். நகர் 3 -வது சேர்ந்தவர் வர்ம சிவ பிரகாஷ் கார்த்தி. இவரது மனைவி லதா ( வயது 45 )இவர் மதுக்கரை ரோட்டில் உள்ள ஒரு தனியார் இன்ஜினியரிங் தொழிற்சாலையில் உதவியாளராக வேலை பார்த்து வந்தார்.இவர் தன்னுடன் வேலை பார்க்கும் மதுக்கரை எம்.ஜி.ஆ.ர்.நகரை சேர்ந்த குஷ்பூ (வயது 36) என்பவருடன் தொழிற்சாலையில் முதல்தளத்தில் இருந்து மிஷின் டூல்ஸ்களை லிப்டில் ஏற்றிக்கொண்டு தரை தளத்துக்கு வந்து கொண்டிருந்தனர்.அப்போது திடீரென்று லிப்ட் அறுந்து விழுந்தது. இதில் இருவரும் படுகாயம் அடைந்தனர். சிகிச்சைக்காக அங்குள்ள தனியார் மருத்துவமனைக்கு எடுத்துச் சென்றனர். வழியில் லதா பரிதாபமாக இறந்தார். குஷ்பூ படுகாயத்துடன் சிகிச்சை பெற்று வருகிறார். இது குறித்து சுந்தராபுரம் போலீசில் புகார் செய்யப்பட்டது. போலீசார் இன்ஜினியரிங் ஒர்க் ஷாப் உரிமையாளர் கதிர்வேல் மீது வழக்கு பதிவு செய்துவிசாரணை நடத்தி வருகிறார்.
கோவை தொழிற்சாலையில் “லிப்ட்” அறுந்து விழுந்து பெண் தொழிலாளி சாவு, மற்றொரு பெண்படுகாயம்.
