இந்தச் சந்திப்பின்போது வெள்ள பாதிப்பாக ரூ.12,659 கோடி வழங்குமாறு பிரதமர் மோடியிடம் முதல்வர் ஸ்டாலின் கோரிக்கை விடுத்துள்ளார். அதில் தற்காலிகமாக ரூ.7,033 கோடியை வழங்க வேண்டும் என்றும் பேரிடர் நிவாரண நிதியில் இருந்து ரு.2,000 கோடியை அவசர நிவாரண நிதியாக வழங்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார். தமிழகத்தில் சென்னை உள்பட நான்கு மாவட்டங்களில் மிக்ஜம் புயல் பெரும் சேதங்களை ஏற்படுத்தியது. இந்தச் சேதங்கள் குறித்து மத்திய குழுவினா் நேரில் ஆய்வு செய்து சென்றனா். மிக்ஜம் புயலால் ஏற்பட்ட பாதிப்புகளை சீா்செய்ய தற்காலிக நிவாரணத் தொகையாக ரூ.7,033 கோடியும், நிரந்தர நிவாரணத் தொகையாக ரூ.12,659 கோடியும் வழங்க வேண்டுமென மத்திய குழுவினரிடம் முதல்வா் மு.க.ஸ்டாலின் கோரிக்கை விடுத்திருந்தாா்.’மிக்ஜம்’ புயலின் தாக்கம் தணிந்து மக்கள் இயல்பு நிலைக்கு மெல்லத் திரும்பத் தொடங்கிய தருணத்தில், இப்போது திருநெல்வேலி-தென்காசி-தூத்துக்
இந்த மாவட்டங்களில் அதிக அளவு உள்கட்டமைப்புகள் சேதமாகியுள்ளன. இந்த நிலையில், வட மாவட்டங்கள், தென் மாவட்டங்களில் கன மழையால் ஏற்பட்ட பாதிப்புகளைச் சீா் செய்யத் தேவையான நிதியை ஒதுக்குமாறு பிரதமா் நரேந்திர மோடியை முதல்வா் மு.க.ஸ்டாலின் சந்தித்து வலியுறுத்துகிறாா்.முன்னதாக, பிரதமரைச் சந்திக்க நேரம் ஒதுக்கக் கோரி அவருக்கு முதல்வா் கடிதம் எழுதியிருந்தாா். அதன் அடிப்படையில் அவரைச் சந்திக்க பிரதமா் நேரம் ஒதுக்கியுள்ளாா். பின்னர் சென்னை திரும்பும் முதல்வர் ஸ்டாலின் தூத்துக்குடி மாவட்டத்தில் வெள்ள பாதிப்புகளை ஆய்வு செய்ய உள்ளார்.