கோவை மாவட்டம் ஆனைமலை பக்கம் உள்ள அம்பராம்பாளையம், சுங்கம் பகுதியைச் சேர்ந்தவர் சுந்தர்ராஜன் .இவரது மகன் அழகர் ராஜன் ( வயது 30)அங்குள்ள தனியார் நிறுவனத்தில் டிசைன் இன்ஜினியராக வேலை பார்த்து வருகிறார். நேற்றுகாலையில் வீட்டை பூட்டிவிட்டு வேலைக்கு சென்று இருந்தார். மாலையில்திரும்பி வந்து பார்த்தபோது வீட்டில் பூட்டு உடைக்கப்பட்டு கிடந்தது. உள்ளேசென்று பார்த்தபோது பீரோவில் இருந்த 9 பவுன் தங்க நகைகளை காணவில்லை. யாரோ திருடி சென்று விட்டனர் .இது குறித்து அழகர்ராஜன்ஆனைமலை போலீசில் புகார் செய்துள்ளார். போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
இன்ஜினியர் வீட்டில் 9 பவுன்நகை திருட்டு.
