எழும்பூர் சிறைச்சந்தை, உடற்பயிற்சிகூடம்: அமைச்சர் ரகுபதி திறந்து வைத்தார் – வீடியோ இணைப்பு.!!

சிறைக்கைதிகளால் தயாரிக்கப்பட்ட பொருட்களை சந்தைப்படுத்தும் விதமாக சென்னை எழும்பூரில் உள்ள சிறைத்துறை தலைமை அலுவலகத்தில் அமைக்கப்பட்டுள்ள சிறைச்சந்தையை சட்டம் மற்றும் சிறைச்சாலைகள் துறை அமைச்சர் ரகுபதி திறந்து வைத்தார்.

மேலும் எழும்பூர் சிறைத்துறை அலுவலக்தில் பணியாளர்கள் உடற்பயிற்சி கூடத்தையும் அமைச்சர் ரகுபதி திறந்து வைத்தார்.

*சிறைத்துறை டிஜிபி அம்ரேஸ் பூஜாரி உள்ளிட்ட சிறைத்துறை உயர் காவல் அதிகாரிகள் பங்கேற்றனர்

தொடர்ந்து சிறைக்கைதகள் வரலாறு மற்றும் சிறைக்கைதிகளின் படைப்பில் உருவான “சிறகிதழ்” மாத இதழையும் அமைச்சர் தொடங்கி வைத்தார்.

அமைச்சர் ரகுபதி பேட்டி: ஆன்லைன் ரம்மி தொடர்பான அதிகார அமைப்பு குழு அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது விரைவில் முறைப்படுத்தப்படும்.

அண்ணா பிறந்த நாளுக்கு 700 சிறைக்கைதிகள் விடுவிக்கப்படுவார்கள் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது அதில் 460 பேர் விடுதலை செய்யப்பட்டனர்.

மற்ற சிறை கைதிகள் குறித்த ஆவணங்கள் ஆளுநரின் ஒப்புதலுக்கு அனுப்பப்பட்டுள்ளது.

சில கோப்புகள் திருப்பி அனுப்பப்படுகின்றன அவை மறு பரிசீலனைக்கும் அனுப்பப்படுகிறது.

குறிப்பிட்ட சில வழக்குகளில் உள்ளவர்கள் தான் விடுவிக்கப்படவில்லை, இஸ்லாமிய சிறை வாசிகளும் விடுதலை செய்யப்பட்டு தான் வருகிறார்கள்.
என்றார்.