கோவை ரத்தினபுரி போலீஸ் இன்ஸ்பெக்டர் இப்ராஹிம் பாதுஷா நேற்று ரத்தினபுரி லட்சுமிபுரம், டெக்ஸ் டூல் பாலம் அருகே ரோந்து சுற்றி வந்தார். அப்போது அங்கு சந்தேகப்படும்படும் நின்று கொண்டிருந்த ஒரு முதியவரை பிடித்து சோதனை செய்தார் . அவரிடம் 2.5 கிராம் மெத்தம்பேட்டமின் ” என்ற உயர் ரகபோதை மருந்து மற்றும் கத்தி, பணம் ரூ. 4500 பறிமுதல் செய்யப்பட்டது .இதை யடுத்து இவர் கைது செய்யப்பட்டார்.விசாரணையில் இவர் தூத்துக்குடியைச் சேர்ந்த ராஜ்குமார் என்ற தம்பி ராஜா என்ற ராஜா பிரகாஷ் காட்வின் ( வயது 20) என்பது தெரிய வந்தது. இவர் தற்போது சென்னை அசோக் நகர், மாந்தோப்பு காலனியில் வசித்து வருகிறார். இவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்..
உயர்ரக போதை மருந்து, கத்தியுடன் முதியவர் கைது..!
