எலக்ட்ரிக் கார், ஸ்மார்ட்போன் விலை பாதியாக குறைய வாய்ப்பு – நிர்மலா சீதாராமன்..!

த்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் மக்களவையில் தாக்கல் செய்ய நிதியியல் மசோதாவில் 35 திருத்தங்களுடன் நிறைவேற்றப்பட்டது.
இந்த 35 மாற்றங்கள் நாட்டின் பொருளாதாரம், ஏற்றுமதி, வர்த்தகம் ஆகியவற்றில் பெரிய அளவில் முன்னேற்றத்தை ஏற்படுத்தக்கூடியது என்றால் மிகையில்லை.செவ்வாய்க்கிழமை தாக்கல் செய்யப்பட்ட நிதி மசோதாவில் கொண்டுவரப்பட்ட 35 திருத்தங்கள் சுங்க வரிகளை ஒழுங்குபடுத்துவதற்கும், உள்நாட்டு உற்பத்தித் திறனை அதிகரிக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளன. இந்த மாற்றங்கள் நாட்டின் வணிகச் சூழலை மேம்படுத்துவதற்கும், நிலையான பொருளாதார வளர்ச்சியை ஊக்குவிப்பதற்கும் உதவும் என மத்திய ​​நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்தார்.இந்த 35 திருத்தங்களில் மிக முக்கியமானது சுங்க வரிகளை ஒழுங்குபடுத்துவது தான், ஏழு பிரிவுகளுக்குச் சுங்க வரி விகிதங்களை அரசு நீக்கியுள்ளது. மத்திய நிதியமைச்சர் வரி முரண்பாடுகளைச் சரிசெய்வதற்கும், உள்நாட்டுத் தொழில்களுக்கான உள்ளீட்டுச் செலவுகள் அதாவது உற்பத்தி செலவுகளைக் குறைத்து நிறுவனங்களின் நிதிச் சுமையைக் குறைப்பதற்கும் கொண்டுவரப்பட்ட முக்கிய திருத்தமாக இருக்கும் என அறிவித்துள்ளார்.மேலும், இறக்குமதி செய்யப்படும் பொருட்கள் செஸ் அல்லது கூடுதல் கட்டணம் ஆகிய இரண்டில் ஏதேனும் ஒன்றுக்கு மட்டுமே உட்படுத்தப்படும் என்றும் இந்த மசோதாவில் அறிவிக்கப்பட்ட மற்றொரு முக்கிய விதியாகும். இதன் மூலம் இரட்டை வரி விதிப்பைக் குறைத்து, நியாயமான இறக்குமதி முறையை நடைமுறைப்படுத்துகிறது மத்திய அரசு.இரு முக்கியமான துறையில் உள்நாட்டு உற்பத்தியை ஊக்குவிக்கும் முயற்சியில், மத்திய அரசு எலக்ட்ரிக் வாகனங்களின் பேட்டரிகள் உற்பத்தியில் பயன்படுத்தப்படும் 35 வகையான மூலதன பொருட்களுக்கும், மொபைல் போன் உற்பத்தியில் பயன்படுத்தப்படும் 28 வகையான பொருட்களுக்கும் மத்திய அரசு சுங்க வரியை முழுமையாக விலக்கியுள்ளது.

இதன் மூலம் அடுத்த 6-8 மாதத்தில் இந்தியாவில் தயாரிக்கப்படும் எலக்ட்ரிக் கார் மற்றும் ஸ்மார்ட்போன் விலை பெரிய அளவில் குறைய வாய்ப்புள்ளது.நாடாளுமன்றத்தில் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் நிதியியல் மசோதா-வை தாக்கல் செய்யும் போது, இந்த சீர்திருத்தங்கள் சர்வதேச வர்த்தகம் மற்றும் முதலீட்டு விதிமுறைகளுடன் ஒத்துப்போவதாகத் தெரிவித்தார். அதே நேரத்தில் இந்திய அரசு நியாயமான வரிவிதிப்பு கட்டமைப்பைக் கொண்டுள்ளதாகவும் தெரிவித்தார்.இந்த மசோதா லோக் சபாவில் நிறைவேற்றப்பட்ட நிலையில் தற்போது ராஜ்ய சபாவின் ஒப்புதலுக்காக அனுப்பப்பட்டு உள்ளது. இது நிறைவேற்றப்பட்டால், இந்தியப் பொருளாதாரத்தில் பெரிய மாற்றங்களை ஏற்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. குறிப்பாக, உள்நாட்டு உற்பத்திக்கு இது ஒரு பெரிய உந்துதலாக இருக்கும் என்று நிபுணர்கள் கருதுகின்றனர்.