சென்னை: பொதுமக்களுக்கு பாதிப்பில்லாத வகையில் மின்கட்டணத்தில் மாற்றம் கொண்டு வரப்பட்டுள்ளது என அமைச்சர் செந்தில் பாலாஜி கூறியுள்ளார்.
மின்கட்டணத்தை உயர்த்தாவிட்டால் ஒன்றிய அரசு மானியம் குறைக்கப்படும் என்ற கட்டாயத்தால் தமிழகத்தில் மின்கட்டணம் உயர்த்தப்படுவதாக அமைச்சர் செந்தில் பாலாஜி அறிவித்துள்ளார். மேலும் வீட்டு இணைப்பிற்கான 100 யூனிட் இலவச மின் விநியோகத்தில் எந்த மாற்றமும் இல்லை எனவும் அமைச்சர் செந்தில் பாலாஜி கூறியுள்ளார்.