ராமநாதபுரம் மாவட்டம் மண்டபம் அருகே வேதாளை தெற்கு தெரு ஜமாத், அல் பத்ரு இஸ்லாமிய இளைஞர் பேரவை சார்பில் 21 ஆம் ஆண்டு மின்னொளி கைப்பந்து போட்டி இரண்டு நாட்கள் தொடர்ந்து நடைபெற்றது.
இப் போட்டியில் பல ஊர்களைச் சார்ந்த போட்டியாளர்கள் 64 அணிகளாக பங்கேற்றனர். பல கட்டங்களாக போட்டி நடைபெற்று இறுதிப்போட்டியில் வெற்றி பெற்ற முத்தப்பா பிரியாணி அணியினர் முதல் பரிசு வென்றது. பரீத் ஓட்டல், ஜே டி காகா அணிகள் 3ம், 4ம் பரிசு வென்றது. வெற்றி பெற்ற அணிக்கு வேதாளை ஊராட்சி மன்ற முன்னாள் தலைவர் அல்லா பிச்சை ரூ.1 லட்சம் சிறப்பு பரிசு வழங்கினார். மேலும் 12 அணிகளின் சிறப்பான ஆட்டத்தின் புள்ளிகள் அடிப்படையில் பரிசுத்தொகை வழங்கப்பட்டது. மண்டபம் பேரூராட்சி கவுன்சிலர் வாசிம் அக்ரம், ராமநாதபுரம் தெற்கு ஒன்றிய திமுக நிர்வாகி இ.அ.செய்யது அப்பாஸ் ஆகியோர் இணைந்து வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு கோப்பை வழங்கினார். சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்திய வீரர்களுக்கு வேதாளை காமில், மாலிக், அஷரப் அலி, யாகூப், செய்யது முகைதீன் மீராஸா, ஆகியோர் சிறப்பு பரிசு வழங்கினர்.
வேதாளை எஸ் பி சீ புட்ஸ், ராமநாதபுரம் ஓட்டல் முத்தப்பா பிரியாணி, பெஸ்ட் சீ புட்ஸ், மரைக்காயர்பட்டினம் டஸ்ட் அண்ட் டான் ரெசார்ட், ராமநாதபுரம் மாவட்ட திமுக பொறியாளர் அணி துணை அமைப்பாளர் சபீக் ரஹ்மான், ஜாபிரா குரூப், ஸ்கை ஸ்டார் போர்ட் யார்டு, வேதாளை ஓ எம் எஸ் ஹபிபுல்லாஹ், ராமநாதபுரம், சென்னை, திருச்சி, எப் பி டிசைனர் எம்போரியம், கே கே சீ புட்ஸ், பனைக்குளம் ரினோஸ் கான், ஜின்னா ஆகியோர் பரிசுத் தொகை வழங்கினர்.
மண்டபம் கிழக்கு ஒன்றிய திமுக முன்னாள் பொறுப்பாளரும், முன்னாள் ஒன்றிய கவுன்சிலருமான தௌபீக் அலி போட்டியை ஒருங்கிணைத்தார்.