காரில் யானை தந்தம் கடத்தல் – 4 பேர் கைது..!

கோவை ராம் நகர் ராமர் கோவில் பகுதியில் யானை தந்தம் உள்ளிட்ட பொருட்களுடன் காரில் ஒரு கும்பல் இருப்பதாக கோவை சரக வனத்துறை அதிகாரிகளுக்கு தகவல் வந்தது. இதை தொடர்ந்து கோவை வன சரக அதிகாரி தலைமையில் வனத்துறையினர் விரைந்து சென்று காரில் இருந்த கும்பலை மடக்கி பிடித்தனர். இதையடுத்து அந்த காரில் சோதனை செய்த போது யானை தந்தம், சிறுத்தையின் பல் நகங்கள், உள்ளிட்ட வனவிலங்குகளின் உடல் பாகங்கள் இருந்தது. அவற்றை மேட்டூர் இருந்து கோவைக்கு கடத்தி வந்தது தெரிய வந்தது. உடனே அவற்றை வனத்துறையினர் பறிமுதல் செய்தனர். இதையடுத்து யானை தந்தம் சிறுத்தையின் நகங்களை கடத்தி கோவையில் விற்க முயன்றகிருபா ( வயது 24) சதீஷ்குமார் (வயது26) விஜய் (வயது 45) கவுதம் (வயது26 )ஆகிய 4 பேரை கைது செய்தனர். இவர்கள் அனைவரும் சேலம் மாவட்ட மேட்டூர் பகுதியைச் சேர்ந்தவர்கள்  ஆவார்கள். 4 பேரும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.