வெள்ளை மாளிகைக்கு 5 டெஸ்லா காருடன் வந்த எலான் மஸ்க்… சிவப்பு நிற காரை வாங்கிய டிரம்ப்..!

வாஷிங்டன்: அமெரிக்க அதிபர் டிரம்பின் வெள்ளை மாளிகை டெஸ்லா கார்களுக்கான காட்சியகமாக மாறியது. டெஸ்லா நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி எலான் மஸ்க், திடீரென ஐந்து கார்களுடன் அதிபரின் அதிகாரப்பூர்வ இல்லத்திற்கு வந்தார்.

டிரம்பும், எலான் மஸ்கும் தெற்கு புல்வெளியில் ஐந்து கார்களுடன் போஸ் கொடுத்தனர். அப்போது டிரம்ப், தனக்கு பிடித்த சிவப்பு நிற காரை தேர்வு செய்தார். அந்த காரில் அமர்ந்த டிரம்ப், ‘இந்த காருக்கான காசோலையை எலான் மஸ்கிடம் வழங்குகிறேன். இதன் விலை சுமார் ரூ.70 லட்சம் ஆகும்’ என்றார்.