எலான் மஸ்க் முயற்சி தோல்வி… நடுவானில் வெடித்து சிதறிய ‘ஸ்டார்ஷிப்’ ராக்கெட்..!

வுத் பத்ரே தீவு: ‘ஸ்பேஸ் எக்ஸ்’ நிறுவனம் நடத்திய சோதனையின் போது ‘ஸ்டார்ஷிப்’ ராக்கெட் விண்ணில் ஏவப்பட்ட சில நிமிடங்களில் வெடித்துச் சிதறியது.

உலக பணக்காரரும், முன்னனி தொழிலதிபருமான எலான் மஸ்க்கிற்கு சொந்தமான ‘ஸ்பேஸ் எக்ஸ்’ நிறுவனம் விண்வெளி ஆய்வு பணிகளில் ஈடுபட்டு வருகிறது. அந்த வகையில் 400 அடி உயரம் கொண்ட உலகின் மிகப்பெரிய ராக்கெட்டை விண்ணில் ஏவுவதற்கான பணிகளை ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனம் மேற்கொண்டது. இந்த ராக்கெட்டிற்கு ‘ஸ்டார்ஷிப்’ என்று பெயரிடப்பட்டது.

விண்வெளியில் சுற்றுப்பயணம் செல்லும் வகையில் இந்த ராக்கெட் வடிவமைக்கப்பட்டு இருந்தது. இந்த ராக்கெட் மூலம் நிலவுக்கும், செவ்வாய் கிரகத்திற்கும் மனிதர்களை அனுப்பவும் ‘ஸ்பேஸ் எக்ஸ்’ நிறுவனம் திட்டமிட்டது. அமெரிக்காவின் டெக்சாசில் உள்ள ராக்கெட் ஏவுதளத்தில் இருந்து ‘ஸ்டார்ஷிப்’ ராக்கெட் சோதனை முறையில் விண்ணில் செலுத்தப்பட்டது. அப்போது பூஸ்டர் ராக்கெட் செயல்படாததால் ஏவப்பட்ட 4 நிமிடங்களில் திடீரென ராக்கெட் நடுவானில் வெடித்துச் சிதறியது. ஹவாய் தீவு அருகே உள்ள பசிபிக் கடலில் இது விழுந்தது. இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.