அரசு ஊழியர்கள் மீது அமலாக்கத்துறை வழக்குத் தொடர முன் அனுமதி பெற வேண்டும் – உச்சநீதிமன்றம் உத்தரவு..!

ரசு ஊழியர்கள் மீது அமலாக்கத்துறை வழக்கு தொடர்வதற்கு முன், அனுமதி பெற வேண்டும் என உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது.

தெலுங்கானாவை சேர்ந்த வழக்கு ஒன்றில், அமலாக்கத்துறை உரிய அனுமதி பெறாமல் வழக்கு தொடர்ந்ததாக கூறி, தெலுங்கானா உயர் நீதிமன்றம் அமலாக்கத்துறை பதிவு செய்த சட்டவிரோத பணப் பரிமாற்ற வழக்கை ரத்து செய்து உத்தரவிட்டது. இதனை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் அமலாக்கத்துறை மேல்முறையீடு செய்தது.

இந்த வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்ற நீதிபதிகள் அபய்.எஸ். ஓஹா, அகஸ்டின் ஜார்ஜ் அமர்வு, ‘குற்றவியல் நடைமுறை சட்டம் 171ன் படி, அரசு ஊழியர் மீது வழக்கு பதிவு செய்ய உரிய முன் அனுமதி பெறுவது அவசியமானது’ என்று தெரிவித்தது. பின்னர் அமலாக்கத்துறை மேல்முறையீட்டு மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டது.