அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சி நிறுவன தலைவர் ஆர். சரத்குமார் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:- அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சியின் கோவை மாவட்டத்தைச் சேர்ந்த வி .ஆர். வேல் மயில் மாநில இளைஞரணி துணைச் செயலாளராகவும், நெல்லை மாநகர் மாவட்ட செயலாளராக பி.எஸ். சரத் ஆனந்த்தும், தென்சென்னை மத்திய மாவட்ட செயலாளராக எம் .ஆர். நடராஜ்குமாரும் நியமிக்கபட்டுள்ளனர் என்பதை தெரிவித்துக் கொள்கிறேன். புதிதாக நியமிக்கப்பட்டுள்ள மாநில நிர்வாகிகளுக்கு அவர் சார்ந்த அணி நிர்வாகிகளும், மாவட்டச் செயலாளர்களும் அவர்கள் பொறுப்பு வகிக்க இருக்கும் மாவட்டத்திற்கு உட்பட்ட நிர்வாகிகளும் முழு ஒத்துழைப்பு அளித்து கட்சி வளர்ச்சிப் பணிகளை சிறப்பாக மேற்கொள்ளுமாறு கேட்டுக் கொள்கிறேன் இவ்வாறு இதில் கூறப்பட்டுள்ளது..